$1 மி. கடனை அடைக்க $700,000 மதிக்கத்தக்க பொருள்களைக் கையாடியவருக்குச் சிறை

2 mins read
ad16609d-c1fb-4f84-9ba3-64dfa91f7c51
-

சூதாட்­டம், இதர செல­வு­கள் கார­ண­மாக $1 மில்­லி­யன் கடன்­சுமைக்கு ஆளான பொருள் சேமிப்­புக்­கி­டங்கு மேற்­பார்­வை­யாளர் ஒரு­வர், கிட்­டத்­தட்ட $700,000 மதிப்­பி­லான எஸ்கே-II அழகு பரா­ம­ரிப்­புப் பொருள்­களைக் கையாடி இரு­வ­ரி­டம் அவற்றை விற்­றார்.

இணை­யப் பொருள் விற்­ப­னை­யா­ளர்­க­ளான அந்த இரு­வ­ரி­ட­ம் இ­ருந்து $250,000 தொகையை ஃபூ யூ ஆன், 50, பெற்­றுக்­கொண்­டார். நீதி­மன்ற ஆவ­ணங்­களில் அவர்­கள் பற்­றிய விவ­ரங்­கள் குறிப்­பி­டப்­ப­ட­வில்லை.

நம்­பிக்கை மோச­டிக் குற்­றச்­சாட்டை ஃபூ ஒப்­புக்­கொண்­டதைத் தொடர்ந்து, நேற்று அவ­ருக்கு நான்கு ஆண்டு, ஆறு மாதச் சிறைத் தண்­டனை விதிக்­கப்­பட்­டது.

குற்­றம் புரிந்­த­போது, லக்­‌ஷரி வெஞ்­சர்ஸ் (பியூட்டி) எனும் நிறு­வனத்­துக்­காக ஃபூ பணி­யாற்­றி­னார். செந்­தோசா கேட்­வே­யில் பணி­ய­மர்த்­தப்­பட்ட அவர், விநி­யோ­கிப்­பா­ளர்­க­ளி­டம் இருந்து பொருள்­க­ளைப் பெற்­றுக்­கொள்ளும் பொறுப்பை வகித்­தார். பின்­னர் அவற்­றைக் கடை­க­ளுக்கு அவர் அனுப்பி வைப்­பார்.

சூதாட்­டம், இதர நட­வ­டிக்­கை­களில் பணத்தை இழந்த பிறகு, 2022 செப்­டம்­ப­ரில் ஃபூ $1 மில்­லி­யன் வாங்­கி­ய­தாக அரசுத்தரப்பு வழக்­க­றி­ஞர் லிம் யூ ஹுவெய் நீதி­மன்­றத்­தில் கூறி­னார்.

கடனை அடைக்க, பொருள் சேமிப்­புக்­கி­டங்­கில் இருந்த சில பொருள்­க­ளைக் கையாடி அவற்றை லாபத்­திற்கு விற்க திட்­டம் தீட்­டி­னார்.

இணை­யத்­தில் அழகு பரா­ம­ரிப்­புப் பொருள்­களை விற்­கும் இரு­வ­ரைத் தொடர்­பு­கொண்ட ஃபூ, எஸ்கே-II பொருள்­களை வாங்­கிக்­கொள்ள விருப்­பமா எனக் கேட்­டார். ரொக்­கம் மற்­றும் வங்­கிக் கணக்­கிற்­குப் பணத்தை மாற்­றி­வி­டு­வ­தன் மூலம் அந்தப்­பொருள்­களை வாங்­கிக்­கொள்ள அவர்­கள் இணக்­கம் தெரி­வித்­த­னர்.

2022 செப்­டம்­ப­ருக்­கும் நவம்­ப­ருக்­கும் இடைப்­பட்ட காலத்­தில், குறைந்­தது இரு தரு­ணங்­களில் பொருள் சேமிப்­புக்­கி­டங்­கில் இருந்த கிட்­டத்­தட்ட $700,000 மதிப்­பி­லான எஸ்கே-II பொருள்­களை ஃபூ கையா­டி­னார்.

அந்த இரு­வ­ரி­ட­மி­ருந்து $150,000 முதல் $250,000 வரை தாம் பெற்­றுக்­கொண்­டதை ஃபூ ஒப்­புக்­கொண்­டார்.

அப்­பொ­ருள்­களை அவர்­களிடம் ஒப்­ப­டைப்­ப­தற்­குள் ஃபூ கைது செய்­யப்­பட்­டு­விட்­ட­தாக வழக்­க­றி­ஞர் லிம் தெரி­வித்­தார்.

சேமிப்­புக்­கி­டங்­கிற்­குச் சென்று அங்­குள்ள பெட்­டி­களில் சில எஸ்கே-II பொருள்­கள் இல்­லா­ததை உதவி மேலா­ளர் கவ­னித்­த­தைத் தொடர்ந்து ஃபூவின் குற்­றங்­கள் வெளிச்­சத்­திற்கு வந்­தன.

சேமிப்­புக்­கி­டங்­கிற்கு வரு­வ­தற்கு முன் அப்­பெட்­டி­கள் காலி­யாக இருந்­த­னவா என ஃபூ­விடம் அந்த உதவி மேலா­ளர் கேட்­டார். ஆனால், ஃபூ அதற்­குப் பதி­ல் அளிக்­க­வில்லை.

பின்­னர் பொது மேலா­ளரை அந்த உதவி மேலா­ளர் தொடர்­பு­கொண்­டார். அந்­தப் பொது மேலாளர் ஃபூவை எதிர்­கொண்­டதைத் தொடர்ந்து, ஃபூ குற்­றங்­களை ஒப்­புக்­கொண்­டார். 2022 நவம்­பர் 17ஆம் தேதி காவல்­துறையி­ன­ருக்­குத் தக­வல் அளிக்­கப்­பட்­டது.

ஃபூ கையா­டிய பொருள்­கள் அவ­ரி­ட­மி­ருந்து திரும்­பப் பெறப்­பட்­டு­விட்­ட­னவா என்­பது பற்றி நீதி­மன்ற ஆவ­ணங்­களில் குறிப்­பி­டப்­ப­ட­வில்லை.

நம்­பிக்கை மோசடி புரிந்த குற்­றத்­திற்­காக அவ­ருக்கு 15 ஆண்டு­கள் வரை சிறைத் தண்­ட­னை­யும் அப­ரா­த­மும் விதிக்­கப்­பட்­டு இருக்­க­லாம்.