குடும்ப வன்முறையால் பாதிக்கப்பட்ட ஆண்களுக்கு ஆதரவு வழங்கும் புதிய திட்டம்

2 mins read
93ce5d87-4998-453e-8626-041ad7512183
-

குடும்ப வன்­மு­றை­யால் பாதிக்­கப்­பட்ட ஆண்­க­ளுக்கு ஆத­ரவு தரும் நோக்­கில் லூத­ரென் சமு­தா­யப் பரா­ம­ரிப்­புச் சேவை எனும் அமைப்பு எட்டு வார ஆத­ர­வுத் திட்­டத்தை நடத்­தி­யுள்­ளது.

சென்ற ஆண்டு நவம்­பர் முதல் இந்த ஆண்டு ஜன­வரி வரை இடம்­பெற்ற இத்­திட்­டத்­தின் முதற்­கட்­ட­த்தில் குடும்ப வன்­முறை­யால் பாதிக்­கப்­பட்ட மூன்று ஆண்­கள் கலந்­து­கொண்­ட­னர்.

குடும்ப வன்­முறை குறித்த கலந்­து­ரை­யா­டல், பாதிக்­கப்­பட்ட மற்­ற­வர்­களின் அனு­ப­வங்­க­ளைப் புரிந்து கொள்­ளு­தல், ஆத­ர­வுக் கட்­ட­மைப்பை விரி­வு­ப­டுத்­து­தல் ஆகி­ய­வற்­றுக்கு இந்தத் ­திட்­டம் வழி­வ­குத்­த­தா­கக் கூறப்­ப­டு­கிறது.

ஆதரவுத் திட்­டத்­தின் முதற்­கட்­டம் வெற்­றி­க­ர­மாக அமைந்­ததைத் தொடர்ந்து, இரண்­டா­வது முறை இதனை நடை­முறைப்­ப­டுத்­தத் திட்­ட­மி­டப்­ப­டு­கிறது.

சிங்­கப்­பூ­ரில் பெண்­க­ளுக்கு எதி­ரான குடும்ப வன்­செ­யல்­கள் குறித்த விழிப்­பு­ணர்வு போதிய அள­வில் இருந்­தா­லும் மனை­வி­யால் துன்­பு­றுத்­தப்­படும் ஆண்­க­ளுக்கு ஆத­ரவு தரும் திட்­டங்­கள் இல்லை என்­பதை சமூக சேவை­யா­ளர்­களும் லூத­ரென் சமுதாயப் பராமரிப்புச் சேவை அமைப்­பி­ன­ரும் சுட்­டி­னர்.

பொது­வாக இத்­த­கைய பாதிப்­பு­களை வெளி­யில் காட்­டிக் கொள்­ளா­மல் மறைத்­துக்­கொண்டு நட­மா­டு­வது ஆண்­க­ளின் இயல்பு என்று கூறினர் பாதிக்­கப்­பட்ட ஆண்­கள்.

இத்­திட்­டத்­தின் மூலம் தங்­க­ளுக்கு நேர்ந்த கசப்­பான அனு­ப­வங்­க­ளைப் பகிர்ந்­து­கொள்ள வாய்ப்­புக் கிடைத்ததாகவும் இத்­த­கைய வலி பிற­ருக்­கும் ஏற்­பட்­ட­துண்டு என்று புரிந்து­கொள்­ள­ வழி­வ­குத்ததாகவும் அவர்கள் குறிப்­பிட்­ட­னர்.

லூத­ரென் அமைப்பு இம்­மா­தம் 20ஆம் தேதி ஏற்­பாடு செய்­துள்ள 'ரிய­லிங்க்' நிகழ்ச்சி மூலம் இந்­த ஆதரவுத் திட்­டம் குறித்த விழிப்­புணர்வை ஏற்­படுத்த முனைந்­துள்­ளது.

திட்­டத்­தின் முதற்­கட்­டத்­தில் பங்­கு­பெற்ற மூன்று ஆண்­களும் அடுத்­த­டுத்த கட்­டங்­களில் உதவி செய்ய முன்­வந்­துள்­ள­னர்.

ஆத­ர­வுக் குழு­வில் பதிவு செய்­து­கொள்ள விரும்­பு­வோர் connect@lccs.org.sg எனும் மின்­னஞ்­சல் முக­வ­ரி மூலம் பதிவு செய்துகொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.