மோட்டார் சைக்கிள்களுக்கான வாகன உரிமைச் சான்றிதழ் கட்டணம் (சிஒஇ) 58.9 விழுக்காடு சரிந்துள்ளது.
இப்பிரிவுக்கான சிஒஇ கட்டணம் 5,002 வெள்ளியாகப் பதிவானது.
விலை உயர்வைக் கட்டுப்படுத்த மோட்டார் சைக்கிள் சிஒஇ ஏலக் குத்தகைக்குச் செலுத்தவேண்டிய முன்பணம் 800 வெள்ளியிலிருந்து 1,500 வெள்ளிக்கு உயர்த்தப்பட்டது.
அதைத் தொடர்ந்து கட்டணம் பெரிய அளவில் குறைந்தது.
இதர வாகனப் பிரிவுகள் பலவற்றிலும் கட்டணம் சற்று குறைந்தது.
1,600 சிசி கொள்ளளவுக்குள் இருக்கும் சிறிய கார்கள், 110 கிலோவாட் வரை சக்திகொண்ட மின்சாரக் கார்கள் ஆகியவற்றுக்கான சிஒஇ கட்டணம் 2.6 விழுக்காடு குறைந்து 101,000 வெள்ளியாகப் பதிவானது.
பெரிய கார்கள், கூடுதல் சக்திகொண்ட மின்சாரக் கார்கள் ஆகியவற்றுக்கான கட்டணம் 1.2 விழுக்காடு குறைந்து 119,399 வெள்ளியாகப் பதிவானது.
இந்த இரு பிரிவுகளிலும் புதிய சிஒஇ ஏலக் குத்தகை முறை செயல்படுத்தப்பட்டதையடுத்து கட்டணம் குறைந்தது.
பொதுப் பிரிவில் சிஒஇ கட்டணம் 0.4 விழுக்காடு குறைந்து 124,002 வெள்ளியாகப் பதிவானது.
வர்த்தக வாகனங்களுக்கான பிரிவில் மட்டும் கட்டணம் 0.3 விழுக்காடு உயர்ந்து 75,334 வெள்ளியாகப் பதிவானது.

