அடித்தளத் தலைவர்களுக்கு புதிய ஆதரவுத் தொகை

அடித்தளத் தலைவர்களுக்கு புதிய ஆதரவுத் தொகை

2 mins read
edc2ccc1-e788-45a9-a114-451e15274821
-

அடித்­த­ளத் திட்­டங்­க­ளின் தலை­வர்­களை உரு­வாக்கி அவர்­களுக்கு ஆத­ர­வ­ளிக்­கும் புதிய ஆத­ர­வுத் தொகை தொடங்­கப்­பட்­டுள்­ளது. இதன் மூலம் அவர்­கள் சமூ­கத்­தின் தேவை­க­ளைப் பூர்த்தி செய்ய முடி­யும்.

'தி எஸ்ஜி ஸ்ட்­ரோங் ஃபெல்லோ­ஷிப்' எனும் அமைப்பு, 15 பேருக்கு அவர்­க­ளின் அடித்­த­ளத் திட்­டங்­க­ளுக்கு தலா $10,000 ஆத­ர­வுத் தொகை வழங்­கப்­படும்.

இந்த ஆத­ர­வுத் தொகையை 'தி மெச்­சூ­ரிட்டி டிரஸ்ட்' எனும் அறப்­பணி அமைப்பு அளிக்­கிறது. அதற்கு ஆத­ர­வ­ளிக்­கும் வித­மாக ஜிஐசி எனும் உல­க­ளா­விய முத­லீட்டு நிறு­வ­னம் $250,000 தொகையை வழங்­கு­கிறது.

சமு­தாய, குடும்ப மேம்­பாட்டு அமைச்­சர் மச­கோஸ் ஸுல்­கி­ஃப்லி நேற்று இந்த ஆத­ர­வுத் தொகைத் திட்­டத்தை நேற்று தொடங்கி வைத்­தார்.

இந்­தப் புதிய ஆத­ர­வுத் தொகை திட்­டம், அடித்­த­ளத் திட்­டங்­களை நிறை­வேற்­றும் தலை­வர்­கள் சமூ­கத்தை உரு­வாக்க உத­வும்.

அவர்­கள் தனி­யா­கவோ அல்­லது பல­ரும் ஒன்­று­சேர்ந்து நிதி வளங்­க­ளைத் திரட்டி பெரிய, மிக­வும் சிக்­க­லான பிரச்­சி­னை­களை ஒரு குழு­வா­கச் சமா­ளிக்­க­லாம்.

சமூக அள­வில் தாக்­கத்தை எதிர்­கொள்­ளும் குழுக்­களை உரு­வாக்­கு­வ­தில் அறப்­பணி அமைப்­பு­கள் முக்­கிய பங்­காற்று­வ­தாக அமைச்­சர் மச­கோஸ் தெரி­வித்­தார்.

'தி மெச்­சூ­ரிட்டி டிரஸ்ட்' எனும் அறப்­பணி அமைப்­பும் ஜிஐசி எனும் உல­க­ளா­விய முத­லீட்டு நிறு­வ­ன­மும் இணைந்து கொவிட்-19 பெருந்­தொற்று காலத்­தின்­போது தனது 'தி எஸ்ஜி ஸ்ட்­ரோங் நிதித் திட்­டம்' மூலம் அடித்­த­ளத் திட்­டங்­க­ளுக்­கும் குழுக்­க­ளுக்­கும் நிதி­யா­த­ரவு அளித்­ததை அமைச்­சர் சுட்­டி­னார்.

"அடுத்த கட்­ட­மாக நாம் ஒரு­வ­ருக்கு ஒரு­வர் ஆத­ர­வாக இருந்து இன்­னும் நல்ல காரி­யங்­க­ளைச் செய்ய வேண்­டும். நமக்­குள் இருக்­கும் பலங்­க­ளை­யும் வளங்­க­ளை­யும் ஒன்­று­தி­ரட்டி பிரச்­சி­னை­க­ளுக்­குத் தீர்வு காண வேண்­டும்," என்­றும் திரு மச­கோஸ் கூறி­னார்.

கடந்த மூன்று ஆண்­டு­க­ளாக, இந்த நிதித் திட்­டம் 150க்கு மேற்­பட்ட அடித்­த­ளத் திட்­டக் குழுக்­க­ளுக்­கும் வெளி­நாட்டு ஊழி­யர்­கள், இர­வில் வெளி­யி­டங்­களில் தூங்­கு­ப­வர்­கள், குறைந்த வரு­மான குடும்­பங்­கள் என 390,000 பய­னா­ளர்­க­ளுக்கு உதவி வழங்­கி­யுள்­ளது.

'தி எஸ்ஜி ஸ்ட்­ரோங் ஃபெல்லோ­ஷிப்' எனும் புதிய ஆத­ர­வுத் தொகை திட்­டத்­துக்கு விண்­ணப்­பித்­த­வர்­களில் ஒரு­வர் 28 வயது சமூக சேவை ஊழி­யர் ஸுலைஹா ஸுல்­கி­ஃப்லி.

2020 ஏப்­ரல் முதல் கொவிட்-19 பெருந்­தொற்­றால் பெரி­தும் பாதிக்­கப்­பட்ட தனது அண்டை வீட்­டா­ருக்கு ஸுலை­ஹா­வின் குடும்­பம் உதவி செய்­யத் தொடங்­கி­யது. மளி­கைப் பொருள்­களை­யும் அத்­தி­யா­வ­சிய வீட்­டுப் பொருள்­களை­யும் அக்­கு­டும்­பம் வாங்­கித் தந்­தது.

அவ­ரது தந்தை ஓய்­வு­பெற்ற துப்­பு­ர­வுப் பணி­யா­ளர். அவர்­கள் ஈரறை வாடகை வீட்­டில் வசித்­த­னர்.

'புரோ­ஜெக்ட் ஹில்ஸ்' என்று அழைக்­கப்­படும் அக்­குழு, பல வசதி குறைந்த குடும்­பங்­க­ளுக்கு உத­வும் வகை­யில்

தன்னை வளர்த்­துக்­கொண்­டுள்­ளது.

"மற்­ற­வர்­க­ளுக்கு உத­வும் பணி­களில் ஈடுபடும் எங்­க­ளைப் போன்ற சிறிய அமைப்­பு­க­ளுக்கு நிதி­யா­த­ரவு வழங்­கி­னால், நாங்­கள் இன்­னும் உற்­சா­கத்­து­டன் பணி­க­ளை மேற்­கொள்­வோம்," என்­றார் ஸுலைஹா.