மோட்டார்சைக்கிள் களுக்கான ஆகக் கடைசி வாகன உரிமைச் சான்றிதழ் (சிஓஇ) கட்டணம் 58.9% சரிந்து $5,002 ஆனது.
1,600 சிசிக்கு உட்பட்ட சிறிய கார்கள், 110 கிலோ வாட் சக்தி வாய்ந்த மின்சார வாகனங்களுக்கான சிஓஇ கட்டணம் $101,001. ஏப்ரல் 19ஆம் தேதி அது $103,721 ஆக இருந்தது. இப்போது அது 2.6% சரிவு கண்டுள்ளது.
பெரிய கார்கள், இன்னும் அதிகமான சக்தி கொண்ட மின்சார வாகனங்கள் ஆகியவற்றுக்கான சிஓஇ கட்டணம் 1.2% குறைந்து $119,399 ஆனது. ஏப்ரல் 19ஆம் தேதி அது $120,889 ஆக இருந்தது.
பொதுப் பிரிவு வாகனங்களுக்கான சிஓஇ கட்டணம் 0.4% சரிந்து $124,002. ஏப்ரல் 19ஆம் தேதி அது $124,501 ஆக இருந்தது.
வேன்கள், கனரக லாரிகள், சாதாரண லாரிகள் ஆகியவற்றை உள்ளடக்கிய வர்த்தகப் பிரிவு வாகனங்களுக்கான சிஓஇ கட்டணம் 0.3% சரிந்து $75,589 ஆனது. இரண்டு வாரங்களுக்கு முன் அது $75,334 ஆக என்று இருந்தது என்று நிலப் போக்குவரத்து ஆணையம் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியது.