சிங்கப்பூர்-ஜப்பான் உறவை மறுஉறுதிப்படுத்தினர்

1 mins read
0744f8a2-80c2-4479-85ff-ed209a3c1db5
-

பிர­த­மர் லீ சியன் லூங்­கும் ஜப்­பா­னியப் பிர­த­மர் ஃபூமியோ கிஷி­டா­வும் நேற்று சிங்­கப்­பூ­ரில் சந்­தித்­த­னர்.

இரு நாடு­க­ளுக்­கும் இடைப்­பட்ட அரு­மை­யான, நீண்­ட­கால உறவை இரு தலை­வர்­களும் மறுஉறு­திப்­ப­டுத்­தி­னர்.

ஜப்­பா­னியப் பிர­த­மர், நான்கு நாள் ஆப்­பி­ரிக்க பய­ணத்தை முடித்­துக்கொண்டு நாடு திரும்­பிய வழி­யில் சிங்­கப்­பூ­ருக்கு வந்­தார். அவ­ருக்­குப் பிர­த­மர் லீ விருந்து அளித்­துச் சிறப்­பித்­தார்.

பொரு­ளி­யல், மின்­னி­லக்­க­மயம், எரி­சக்தி, சுற்­றுச்­சூ­ழல் போன்ற பரஸ்­பர நல­னுக்­கான துறை­களில் தங்­கள் நாடு­கள் மேலும் எப்­படி ஒத்­து­ழைக்­க­லாம் என்­பது பற்றி இரு தலை­வர்­களும் விவா­தித்­த­தாக வெளி­யு­றவு அமைச்சு தெரி­வித்­தது.

வட்­டார, அனைத்­து­லக நில­வ­ரங்­கள் பற்றிய கருத்­து­க­ளை இரு தலைவர்களும் பரி­மா­றிக்­கொண்­ட­னர்.

விதி­களை அடிப்­ப­டை­யா­கக் கொண்ட உலக ஒழுங்கு முறை கட்­டிக்­காக்­கப்­பட வேண்­டி­ய­தன் முக்­கி­யத்­தை­யும் அவர்­கள் வலி­யு­றுத்­தி­னர். ஜப்­பா­னிய பிர­த­மர் நேற்று தாய­கம் புறப்­பட்­டுச் சென்­றார்.