சிங்கப்பூரில் செயல்படும் பிரிட்டிஷ் அமெரிக்க சிகரெட் (பிஏடி) கிளை நிறுவனம் உள்ளூர் விதிகளை மீறவில்லை.
வடகொரிய தடைகளை மீறியதற்காக அமெரிக்காவில் அந்த நிறுவனத்திற்குச் சாதனை அளவில் அபராதத் தொகை விதிக்கப்பட்டு இருக்கிறது.
என்றாலும்கூட அந்த நிறுவனம் இங்கு உள்ளூர் விதிகளை மீறி நடக்கவில்லை என்று காவல்துறை நேற்று தெரிவித்தது.
'பிஏடி மார்க்கெட்டிங் சிங்கப்பூர்' என்ற அந்த நிறுவனம், வடகொரியாவுக்கு சிகரெட் பகுதிப்பொருள்களை விற்பனை செய்ததில் ஈடுபட்டு இருந்தது என்பது 2018ல் சிங்கப்பூர் அதிகாரிகளுக்குத் தெரியவந்தது.
ஆனால், வடகொரியாவுடன் கூடிய அனைத்து வணிகங்களை யும் சிங்கப்பூர் நிறுத்திவைத்ததற்கு ஐந்து மாதம் முன்னதாகவே 2017 ஜூன் முதல் அந்த நிறுவனம் விற்பனையை நிறுத்திவிட்டது என்று காவல்துறை அறிக்கை ஒன்றில் தெரிவித்தது.
நிலவரங்களைப் பரிசோதித்தபோது அந்நிறுவனம் உள்ளூர்ச் சட்டங்களை மீறவில்லை என்பது தெரியவந்ததாக அது கூறியது.

