பிரிட்டிஷ் அமெரிக்க நிறுவன சிங்கப்பூர் கிளை விதி மீறவில்லை

பிரிட்டிஷ் அமெரிக்க நிறுவன சிங்கப்பூர் கிளை விதி மீறவில்லை

1 mins read
def3083b-de9b-4b9e-bc3e-5796e20f4b21
-

சிங்­கப்­பூ­ரில் செயல்­படும் பிரிட்டிஷ் அமெ­ரிக்க சிக­ரெட் (பிஏடி) கிளை நிறு­வ­னம் உள்­ளூர் விதி­களை மீற­வில்லை.

வட­கொ­ரிய தடை­களை மீறி­ய­தற்­காக அமெ­ரிக்­கா­வில் அந்த நிறு­வ­னத்­திற்­குச் சாதனை அளவில் அப­ரா­தத் தொகை விதிக்­கப்­பட்டு இருக்­கிறது.

என்­றா­லும்­கூட அந்த நிறு­வனம் இங்கு உள்­ளூர் விதி­களை மீறி நடக்­க­வில்லை என்று காவல்­துறை நேற்று தெரி­வித்­தது.

'பிஏடி மார்க்­கெட்­டிங் சிங்­கப்­பூர்' என்ற அந்த நிறு­வ­னம், வட­கொ­ரி­யா­வுக்கு சிக­ரெட் பகு­திப்­பொ­ருள்­களை விற்­பனை செய்­த­தில் ஈடு­பட்டு இருந்­தது என்­பது 2018ல் சிங்­கப்­பூர் அதி­கா­ரி­க­ளுக்குத் தெரி­ய­வந்­தது.

ஆனால், வட­கொ­ரி­யா­வு­டன் கூடிய அனைத்து வணிகங்களை ­யும் சிங்­கப்­பூர் நிறுத்திவைத்­த­தற்கு ஐந்து மாதம் முன்­ன­தாகவே 2017 ஜூன் முதல் அந்த நிறு­வ­னம் விற்­ப­னையை நிறுத்தி­விட்­டது என்று காவல்­துறை அறிக்கை ஒன்­றில் தெரி­வித்­தது.

நில­வ­ரங்­க­ளைப் பரி­சோ­தித்­த­போது அந்நிறு­வ­னம் உள்­ளூர்ச் சட்­டங்­களை மீற­வில்லை என்­பது தெரி­ய­வந்­த­தாக அது கூறி­யது.