தொல்லை விளைவித்ததாக குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு பிறகு பிணையில் விடுவிக்கப்பட்டபோது அதிபர் ஹலிமா யாக்கோப்பைத் தூக்கிட்டுக் கொல்ல வேண்டும் என்று
32 வயது விக்ரமன் ஹார்வி செட்டியார் (படம்) இணையம் வாயிலாக அழைப்பு விடுத்ததாகக் கூறப்படுகிறது.
இதனால் அவர் மீது மூன்றாவது தொல்லை விளைவித்தல் குற்றச்சாட்டு நேற்று சுமத்தப்பட்டது. குறும்புத்தனம் தொடர்பான ஒரு குற்றச்சாட்டையும் அவர் எதிர்நோக்கு கிறார். அதிபரை அவமதிக்கும் வகையில் அவர் கடந்த மாதம் 30ஆம் தேதியன்று காலை 7 மணி அளவில் சுவா சூ காங் வட்டாரத்தில் உள்ள ஒரு வீட்டில் இருந்தபோது இன்ஸ்டகிராமில் பதிவிட்டதாக நம்பப்படுகிறது.

