தாய்லாந்தில் 'மேட்ச்ஃபிக்சிங்': சிங்கப்பூரர் மீது குற்றச்சாட்டு

தாய்லாந்தில் 'மேட்ச்ஃபிக்சிங்': சிங்கப்பூரர் மீது குற்றச்சாட்டு

1 mins read
56fa05c1-9fec-44bf-abdb-2b4e1df17242
-

தாய்­லாந்­தில் நடை­பெற்ற கூடைப்­பந்து ஆட்­டங்­க­ளின் முடிவை முன்­கூட்­டியே நிர்­ண­யிக்க இன்­னொரு சிங்­கப்­பூ­ர­ரு­டன் இணைந்து குறைந்­தது 3,000 அமெ­ரிக்க டாலர் (S$3,975) லஞ்­சம் தந்­த­தாக சிங்­கப்­பூ­ரர் ஒரு­வர் மீது குற்­றச்­சாட்டு பதி­வா­கி­யுள்­ளது.

இரண்டு நிறு­வ­னங்­க­ளுக்கு உரி­மை­யா­ள­ராக இருந்த 30 வயது போ வெய் ஹாவ் மீது நேற்று நான்கு ஊழல் குற்­றச்­சாட்டு­கள் சுமத்­தப்­பட்­டன.

32 வயது குவா வெய் குவா­னு­டன் இணைந்து இக்­குற்­றங்­களை போ புரிந்­த­தா­கக் கூறப்­படு­கிறது.

குவா மீது கடந்த மாதம் 14 குற்­றச்­சாட்­டு­கள் பதி­வா­கின. தாய்­லாந்து, பிலிப்­பீன்ஸ் ஆகிய நாடு­களில் நடை­பெற்ற கூடைப்­பந்து ஆட்­டங்­களின் முடிவை முன்­கூட்­டியே நிர்­ண­யிக்க இவர் ஏறத்­தாழ $70,000 லஞ்­சம் கொடுத்­த­தாக நம்­பப்­ப­டு­கிறது.

இவர் தொடர்­பான வழக்கு நிலு­வை­யில் உள்­ளது.