ஹைஃபிலக்ஸ் நிறுவனத்தின் நிறுவனரும் முன்னாள் தலைமை நிர்வாகியுமான ஒலிவியா லம் ஊய் லின் மீது மேலும் மூன்று குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.
நிறுவனத்தின் இயக்குநராக இருந்தபோது தமது கடமையைச் சரியாகச் செய்யாததற்கு அவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
61 வயது லம் மீது மொத்தம் ஆறு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. அவர் $100,000 பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். 2017ஆம் ஆண்டின் மூன்றாம் காலாண்டு நிதி அறிக்கையை லம் வெளியிடவில்லை என்று குற்றம் சாட்டப்பட்டுள்ளது. 2017ஆம் ஆண்டுக்கான நிதி அறிக்கையையையும் 2018ஆம் ஆண்டின் முதல் காலாண்டு நிதி அறிக்கையையும் அவர் வெளியிடவில்லை என்று அவர் மீது
குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

