மனநல உதவி நாட ஊக்குவிக்கும் திட்டம்

மனநல உதவி நாட ஊக்குவிக்கும் திட்டம்

2 mins read
193fcbcd-2e04-4895-9037-c2cac50d0465
-

ரச்­சனா வேலா­யு­தம்

கொவிட்-19 தொற்­று­நோய்க் காலத்­தில் மக்­க­ளின் மன­நலனைக் கட்டிக்காக்­கும் முயற்சி­களில் ஈடு­பட்ட மோல்­மின்-கேர்ன்­ஹில் வட்­டா­ரத்­தின் சிறிய தொண்­டூ­ழி­யர் குழு இப்­போது பெரிய அள­வில் வளர்ந்து, அந்த வட்­டா­ரத்­தில் உள்ள சமூக, சுற்­றுச்­சூ­ழல் பிரச்­சினை­களைத் தீர்க்க பல முயற்­சி­களை எடுத்­து­வ­ரு­கிறது.

தொற்­று­நோய்க் காலத்­தில் தனி­மை­யில் இருந்த பல­ரும் மன­நலச் சவால்­களை எதிர்­கொண்­டதை அறிந்த மோல்­மின்-கேர்ன்­ஹில் தொண்­டூ­ழி­யர்­கள், மன­ந­லத் திட்­டத்தை உரு­வாக்கி மன­ந­லம் தொடர்­பான பல கலந்­து­ரை­யா­டல்ளை நடத்­தி­னர்.

தொகு­தி­யில் உள்ள சில வட்­டா­ரங்­களில் மட்­டும் செயல்­பட்ட அந்­தத் திட்­டம் கடந்த ஆண்­டு­க­ளாக பெரிய அள­வில் வளர்ந்­துள்­ளது.

கல­ாசார, சமூக, இளை­யர்­துறை மற்­றும் வர்த்­தக, தொழில் துணை அமைச்­சர் ஆல்­வின் டான், தொடர்பு, தகவல் அமைச்­சரும் உள்­துறை இரண்­டாம் அமைச்­ச­ரு­மான ஜோச­ஃபின் டியோ ஆகி­யோர் நேற்று முன்தினம் கேர்ன்­ஹில் சமூக மன்­றத்­தில் நடந்த தொகுதிச் சுற்­று­லா­வின்­போது இம்­முயற்சி­களை­யும் திட்­டங்­களை­யும் நேரில் கண்­டனர்.

முதி­யோ­ருக்­காக நடத்­தப்­பட்ட ஓவி­யம், வண்­ணம் தீட்­டும் அங்­கத்­தில் கலந்­து­கொண்­ட­னர். வட்­டார குடி­யி­ருப்­பா­ளர்­களால் தொடங்­கப்­பட்ட 'கிரீன் மோக்கா' எனும் திட்­டத்­தின் மூலம் சுற்­றுச்­சூழலைப் பாது­காக்­கும் முயற்­சி­கள் அமைச்­சர்­க­ளுக்கு விளக்­கப்­பட்­டன.

கேம்­பி­ரிட்ஜ் வட்­டார நடை­பாதை திறந்­த­வெ­ளி­யில் இருப்­ப­தால் வெயில் காலத்­தில் நடப்­ப­தற்குச் சிர­ம­மாக உள்­ளது.

இந்­தச் சிக்­க­லைத் தீர்க்க அங்கு வசிக்­கும் மக்­கள் செடி­களால் ஓர் ஒதுங்­கும் இடத்தை உரு­வாக்­கி­யுள்­ள­னர். அதே இடத்­தில் மழை பெய்­யும் நேரங்­களில் வெள்­ளம் பெருகி வந்­த­தால் செடி கொடி­களை வைத்து ஒரு தடுப்பு அமைக்­கப்­பட்­டது.

அந்த தொண்­டூ­ழி­யக் குழு, குடி­யி­ருப்­புப் பேட்­டை­க­ளின் அடுக்­கு­மாடி கீழ்தளங்­க­ளை­யும் புதுப்­பித்து, சுற்­றுச்­சூ­ழல் தொடர்­பான நட­வ­டிக்­கை­களை அமைத்­துள்­ளது. அந்தக் காலி­யான இடங்­களைப் பசுமை மையம் போன்ற இட­மாக மாற்றி அமைக்க குழு தொடர்ந்து முயன்று வரு­கிறது.

மக்­க­ளால் தொடங்­கப்­பட்ட இத்­திட்­டங்­கள் தொடர்ந்து மக்­க­ளுக்கு எந்­தெந்த வகையில் உத­வும் என்­பதை எடுத்­துச் சொல்லி அவற்­றின் அவ­சியத்தை அமைச்­சர்­கள் வலி­யு­றுத்­தி­னர்.

"தங்­கள் சமூ­கத்­தில் பிரச்­சினை­யைக் கண்டு அதை தீர்க்க முன்வந்த இவர்­களை நாம் தொடர்ந்து ஆத­ரிப்­போம். சமூ­கத்­து­டன் ஒன்­றி­ணைந்து நடத்­தப்­படும் திட்­டங்­கள் இவர்­களின் முயற்­சி­யால் நீண்ட காலத்­திற்கு நிலைக்­கும்.

"மன­நல சேவை­களையும் 'மோக்கா' திட்­டங்­க­ளை­யும் மற்ற குடி­யி­ருப்­பா­ளர்­க­ளுக்­குக் கொண்டுசெல்ல நாம் தொண்­டூ­ழி­யர்­க­ளு­டன் சேர்ந்து தொடர்ந்து முயல்­கி­றோம்," என்­றார் திரு ஆல்­வின் டான்.