தொடக்கப்பள்ளி மாணவர்களின் விவாதத் திறனை வெளிப்படுத்திய சொற்போர்

தமி­ழில் தொடக்­கப்­பள்ளி மாண­வர்­க­ளுக்­கான ‘சொற்­போர்’ விவா­தப் போட்­டி­யில் தெக் வாய் தொடக்­கப்­பள்­ளிக் குழு வெற்­றி­வாகை சூடி­யது.

எட்­டா­வது ஆண்­டாக நடத்­தப்­பட்ட சொற்­போர், 22 பள்­ளி­க­ளைச் சேர்ந்த 88 மாண­வர்­க­ளு­டன் தொடங்­கியது. கடந்த ஏப்­ரல் 29ஆம் தேதி­யன்று உம­றுப்­பு­ல­வர் தமிழ்­மொழி நிலை­யத்­தில் நடந்­தே­றிய இறு­திச்­சுற்­றில் தெக் வாய் தொடக்­கப்­பள்­ளி­யு­டன் மேரி­மவுண்ட் கான்­வெண்ட் பள்ளி மோதி­யது.

மாண­வர்­க­ளின் தமிழ்ப் பேச்­சாற்­றல், தன்­னம்­பிக்கை, சிந்­தனை­யாற்­றல் ஆகி­ய­வற்றை வளர்க்­க­வேண்டி தமி­ழர் பேரவை இந்த விவா­தப் போட்­டியை ஈராண்­டுக்கு ஒரு­முறை ஏற்­பாடு செய்­து­வ­ரு­கிறது.

தமிழ்மொழி விழாவை ஒட்டி ஏற்­பாடு செய்­யப்­பட்ட இந்த நிகழ்ச்­சிக்கு வளர்­த­மிழ் இயக்­கம், தமிழ்மொழிக் கற்­றல் வளர்ச்­சிக் குழுவும் ஆதரவு அளித்தன.

இந்­நி­கழ்ச்­சி­யின் சிறப்பு விருந்­தி­ன­ராக செம்­ப­வாங் குழுத்­தொ­குதி நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரும் தமிழ்மொழி கற்­றல் வள­ரச்­சிக் குழு­வின் தலை­வ­ரு­மான திரு விக்­ரம் நாயர் வருகை புரிந்­தி­ருந்­தார்.

தயா­ரித்­துப் பேசும் சுற்று, தயா­ரிப்­பின்றி உட­னுக்­கு­டன் தலைப்பை அணு­கிப் புரிந்து கருத்­து­கள் சேக­ரித்­துப் பேசும் சுற்று என இரு சுற்­று­களில் மாண­வர்­கள் போட்­டி­யிட்­டார்­கள்.

தமிழ்­மொழி விழா 2023 கருப்­பொ­ரு­ளான ‘அழகு’ என்­பதை­யொட்டி ‘சமூக ஊட­கங்­கள் தமிழ்­மொ­ழி­யின் அழகை மாண­வர்­க­ளி­டம் கொண்டு சேர்க்க உறு­து­ணை­யாக உள்­ளன’ என்ற தலைப்­பில் மாண­வர்­கள் விவா­தித்­த­னர்.

சிறந்த பேச்­சா­ள­ருக்­கான விருது தெக் வாய் தொடக்­கப்­பள்­ளி­யைச் சேர்ந்த அறி­வ­ழ­கன் கிரி­யேத்­ரா­வுக்கு வழங்­கப்­பட்­டது.

போட்­டி­யாக இந்த நிகழ்ச்சி நடை­பெற்­றா­லும் தமிழ்மொழி ஆளு­மை­யும் பற்­றும் மாண­வர்­களி­டையே எழ வேண்­டும் என்­பதே சொற்­போ­ரின் குறிக்­கோள்.

“தலைப்­பைப் பற்றி தக­வல்­கள் திரட்­டு­வ­தன்வழி தமிழ்­மொழி­யின் அழ­கைப் பற்­றி­யும் தெரிந்­து­கொண்­டேன்,” என்று கூறி­னார் மேரி­ம­வுண்ட் கான்­வெண்ட் பள்­ளி­யைச் சேர்ந்த ஞான­வேலு தாரிணி.

இரு பள்­ளி­க­ளின் பேச்­சா­ளர்­களும் திறம்­ப­டத் தங்­க­ளின் வாதங்­களை முன்­வைக்க அரங்­கமே அவர்­க­ளின் பேச்­சுத் திற­மை­யை­யும் சிந்­த­னைத் திற­னை­யும் கண்டு வியந்­தது.

“போட்­டி­யா­ளர்­கள் பல்­கலைக்­க­ழக மாண­வர்­கள்­போல் தமி­ழில் சிறப்­பா­கப் பேசி­னர்,” என்று போட்­டி­யின் தலைமை நடு­வர் திரு­மதி சரோ­ஜினி பத்ம­நா­தன் குறிப்­பிட்­டார்.

“சிறப்­பாக, தன்­னம்­பிக்­கை­யுடன் தமி­ழில் பேசக்­கூ­டிய மாண­வர்­க­ளுக்­குத் தளங்­கள் அமைத்­துக் கொடுக்­கும் அதே நேரத்­தில் தமி­ழில் பேசத் தயக்­கம் காட்­டும் மாண­வர்­க­ளுக்­கும் நாம் தளங்­களை அமைத்­துக் கொடுக்க வேண்­டும். இனி­வரும் தமிழ்மொழி விழாக்­களில் அவ்­வாறு சிந்­தித்­துச் செய­லாற்­று­வோம்,” என்ற கோரிக்­கை­யைத் தனது வர­வேற்­பு­ரை­யில் முன்­வைத்­தார் தமி­ழர் பேர­வை­யின் பொதுச் செய­லா­ளர் திரு அருண் வாசு­தேவ் கிருஷ்­ணன்.

செய்தி: கரு­ணா­நிதி துர்கா

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!