தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

மலேசிய ஆயுதப் படைத் தலைவர் சிங்கப்பூர் வருகை

2 mins read
5e5986f0-b259-46f1-8380-a8b08bcc288d
-

மலே­சி­யா­வின் ஆயு­தப் படைத் தலை­வர் ஜென­ரல் முகம்­மது அப்­துல் ரஹ்­மான் சிங்­கப்­பூ­ருக்கு மூன்று நாள் அதி­கா­ர­பூர்­வ வருகை மேற்­கொண்­டுள்­ளார். அவரை தற்­காப்பு அமைச்­சர் இங் எங் ஹென் நேற்று பிற்­ப­கல் தற்­காப்பு அமைச்­சின் தலைமையகத்தில் சந்­தித்­துப் பேசி­னார். இரு­நா­டு­க­ளுக்­கும் பொது­வான பாது­காப்­புச் சவால்­களை எதிர்­கொள்ள தற்­காப்பு ஒத்­துழைப்பை வலப்­ப­டுத்­து­வது குறித்து இரு­வ­ரும் கலந்­து­ரை­யா­டி­னர். ஜென­ரல் முகம்­ம­தின் மூன்று நாள் பய­ணம் நேற்று முன்­தி­னம் தொடங்­கி­யது. அவ­ரது சிங்­கப்­பூர் பய­ணம் இரு­நா­டு­க­ளுக்­கும் இடை­யி­லான நீண்­ட­கால நட்­பு­ற­வைப் பிர­தி­பலிப்­ப­தா­கத் தற்­காப்பு அமைச்சு கூறி­யது.

பல்­வேறு நட­வ­டிக்­கை­கள் தொடர்­பாக இரு­நா­டு­க­ளின் ராணு­வங்­கள் அடிக்­கடி ஒன்­றோடு ஒன்று தொடர்­பு­கொள்­வ­தாக அமைச்சு தெரி­வித்­தது.

இரு­நா­டு­க­ளின் ஆயு­தப் படை­கள் ஒன்­றி­ணைந்து நடத்­தும் பயிற்­சி­கள், நிபு­ணத்­து­வப் பரி­மாற்­றங்­கள் ஆசி­யான் தற்­காப்பு அமைச்­சர்­க­ளுக்­கான கூட்­டம் போன்ற பல­த­ரப்­பட்ட தளங்­கள் ஆகி­யவை இவற்­றில் அடங்­கும்.

ஒன்­றி­ணைந்து நடத்­தப்­படும் இத்­த­கைய நட­வ­டிக்­கை­க­ளின் மூலம் இரு­நா­டு­க­ளின் ராணு­வங்­க­ளுக்கு இடையே பரஸ்­பர புரிந்­து­ணர்­வும் நிபு­ணத்­துவ நட்­பு­ற­வும் மேம்­பட்­டுள்­ள­தாக தற்­காப்பு அமைச்சு கூறி­யது.

நேற்று தற்­காப்பு அமைச்­சின் தலை­மை­ய­கத்­தில் ஜென­ரல் முகம்­மது மரி­யா­தைக் காவல் அணி­யைப் பார்­வை­யிட்­டார். அத்­து­டன்­ சிங்கப்­பூ­ரின் தற்­காப்­புப் படைத் தலை­வர் ரியர்-அட்­மி­ரல் ஏரன் பெங்­கை­யும் ராணு­வத் தலை­வர் மேஜர்-ஜென­ரல் டேவிட் நியோ­வை­யும் சந்­தித்­தார். ஜூரோங் முகா­மில் உள்ள மூன்றாவது சிங்­கப்­பூர் பிரி­வை­யும் அவர் சென்று பார்ப்­பார் என்று தெரி­விக்­கப்­பட்­டது. சிங்­கப்­பூர்-மலே­சியா ஆயு­தப் படைகள் இணைந்து நடத்­தும் வரு­டாந்­திர ராணு­வப் பயிற்­சி­யான 'செமாங்­காட் பெர்­சத்­து' பயிற்­சிக்கு ஜென­ரல் முகம்­மது இணைத் தலை­வ­ரா­கச் செயல்­படு­வார்.