தெம்பனிஸ் அவென்யூ 5 புளோக் 147ல் நேற்று காலை தீச்சம்பவம் நிகழ்ந்தது.
அந்தக் குடியிருப்புக் கட்டடத்தின் இரண்டாவது மாடி வீட்டில் தீமூண்டதாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்தது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஏறத்தாழ 60 குடியிருப்பாளர்கள் கட்டடத்திலிருந்து வெளியேற்றப்பட்டனர்.
புகையைச் சுவாசித்து மூச்சுத் திணறல் ஏற்பட்டதற்காக ஒருவர் சிங்கப்பூர் பொது மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.
மின் கோளாறு காரணமாக தீச்சம்பவம் ஏற்பட்டிருக்கக்கூடும் என்று ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
மற்றொரு சம்பவத்தில் பாசிர் ரிஸ் வட்டாரத்தில் உள்ள ஒரு வீவக வீட்டில் தீமூண்டது.
நேற்று முன்தினம் இரவு பாசிர் ரிஸ் ஸ்திரீட் 53 புளோக் 571ன் இரண்டாவது மாடி வீடு ஒன்றில் தீப்பற்றி எரிந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
அந்தக் கட்டடத்தைச் சேர்ந்த கிட்டத்தட்ட 35 குடியிருப்பாளர்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர். ஒருவர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.
