வீட்டு மானியங்கள் இனிமேல் சிங்கப்பூர் குடிமகனாக உள்ள வீட்டு விண்ணப்பத்தாரருக்கு மட்டும் கொடுக்கப்படாது. அதற்குப் பதிலாக வீட்டின் விண்ணப்பதார்கள், அவர்களுடன் வசிப்பவர்களிடையே மானியம் பகிர்ந்து கொடுக்கப்படும். அவர்கள் குடிமக்கள், நிரந்தரவாசியாக எப்படி இருந்ததாலும் மானியம் பகிர்ந்துகொள்ளப்படும்.
வீடமைப்பு வளர்ச்சிக் கழக வீடுகளை வாங்க விரும்புவோரின் வருவாய் இப்போது மூன்று முதல் ஆறுமாத காலத்திற்கு மதிப்பிடப்படுகிறது.
இதற்குக் பதிலாக வருவாய் 12 மாத காலத்திற்குக் கணக்கிடப்படும். இந்தப் புதிய மாற்றங்களைப் பற்றி கழகம் திங்கட்கிழமை வெளியிட்ட அறிக்கையில் அறிவித்தது.
கழகத்தின் செம்மையாக திருத்தி அமைக்கப்பட்ட நடைமுறை நேற்று முதல் நடப்புக்கு வந்தது.
அதன்படி இப்போதைய வீவக கடன் தகுதிக் கடிதத்திற்குப் பதிலாக புதிய கடிதம் இடம்பெறும்.
கொள்முதல் செலவு, பணத்திற்கான விருப்ப உரிமைகள் ஆகியவற்றைப் புதிய கடிதம் தெளிவாக கொள்முதல்காரர்களுக்கு விளக்கும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
வீவக இப்போது வீடு வாங்குபவரின் விவரங்களை 'மைஇன்ஃபோ' தரவு சேவை மூலம் பெறமுடியும். அதன்படி வீடு வாங்குபவரின் தகுதி மதிப்பீடு செய்யப்படுவதால், விண்ணப்பதாரர்களுக்கு காகிதம் தொடர்பான விண்ணப்ப வேலைகள் இருக்காது.
"வீவக, வருமான மதிப்பீட்டு வழிகாட்டிகள் உள்ளிட்ட ஒருங்கிணைந்த முறையில் நெறிப்படுத்தும். மேலும், வீடமைப்புக் கட்டணக் கழிவுகளுக்கான இல்லங்களின் தகுதிநிலையை வீவக சரிசெய்யும்," என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.
இந்தப் புதிய முறையால் அனைவருக்கும் நியாயமாக வீடமைப்பு மானியங்கள் கிடைக்கப்பெறுவது உறுதிப்படுத்தப்படும் என்றும் விவக கூறியது.
வீட்டில் வசிக்கும் சிங்கப்பூர் குடிமக்களும் நிரந்தரவாசிகளும் வீடமைப்பு மானியத்துக்குப் பிறகு இரண்டாம் நிலை விண்ணப்பதாரர்களாகக் கருதப்படுவார்கள்.
விண்ணப்பதாரர்களும் அல்லது வீட்டு உரிமையாளர்களும் வீடமைப்பு மானியங்களைப் பகிர்ந்துகொள்ளலாம். அது அவர்களின் மத்திய சேமநிதியின் சாதாரணக் கணக்குக்குச் செல்லும். அதை அவர்கள் வீடு வாங்குவதற்குப் பயன்படுத்திக்கொள்ளலாம்.
இதற்கிடையே, ஒரு தனிநபர் வீவக வீட்டு தகுதிக் கடிதத்துக்கு விண்ணப்பிப்பதற்கு முன், மதிப்பீட்டுக் காலம் இரண்டு மாதங்கள் குறையும். வீவக வீட்டு தகுதிக் கடிதம் பெற்றவர்களுக்கு வீட்டுக்கு விண்ணப்பிக்கும் முன், அவர்கள் வேலையில் இருக்க வேண்டும். அப்போதுதான் அவர்கள் வீவக வீடமைப்பு மானியத்துக்கும் மேம்பட்ட மசே நிதி வீடமைப்பு மானியத்துக்கும் தகுதி பெறமுடியும்.