சிங்கப்பூரில் பயனாளர்கள் உள்ளூர் வணிகங்களுக்கு வாட்ஸ்அப் மூலம் பணம் அனுப்பலாம்

சிங்கப்பூரில் பயனாளர்கள் உள்ளூர் வணிகங்களுக்கு வாட்ஸ்அப் மூலம் பணம் அனுப்பலாம்

2 mins read
081b0c33-cbdc-4958-8fc6-2530ebaa3209
-

வாட்ஸ்­அப் வழி­யாக கட்­ட­ணம் செலுத்­தும் புதிய அம்­சம் நேற்று வாட்ஸ்­அப்­ செயலியில் அறி­மு­க­மா­னது. சிங்­கப்­பூ­ரில் பதி­வு­செய்­யப்­பட்ட வாட்ஸ்­அப் எண்­ணைக் கொண்ட சிங்­கப்­பூர்­வா­சி­கள் தங்­கள் வாட்ஸ்­அப் மூலம் கடன் அட்டை, வங்கி அட்டை அல்­லது பேந­ஃவ்வை பயன்­ப­டுத்தி பணம் செலுத்த இந்த அம்­சம் உத­வு­கிறது.

பய­னா­ளர்­களும் வணி­கங்­களும் தங்­கள் பரி­வர்த்­த­னை­களைச் செய்ய வெளிப்­புற இணை­யத்­த­ளம் அல்­லது பயன்­பாட்­டிற்­குச் செல்­லா­மல் நேர­டி­யாக வாட்ஸ்­அப்­பில் வாங்­க­வும் விற்­க­வும் அனு­ம­திக்­கிறது.

வாட்ஸ்­அப் தற்­போ­தைக்கு சிங்­கப்­பூரை தள­மா­கக்கொண்ட சில வணி­கங்­க­ளுக்கு இச்­சேவையை அனு­ம­திக்­கிறது. வரும் மாதங்­களில் இங்­குள்ள மேலும் பல நிறு­வ­னங்­க­ளுக்கு இச்­சேவை விரி­வ­டை­யும்.

சேவை­யைப் பயன்­ப­டுத்­தும் உள்­ளூர் வணி­கங்­களில் தாவர அடிப்­ப­டை­யி­லான 'இறைச்சி' உணவு­களை விற்­கும் 'லவ் ஹேண்­டில்', 'ஜிம் நோ எக்ஸ்­கி­யூ­சஸ்', 'லைஃப்ஸ்­டைல் ​​பூட்­டிக் டை டை', 'பேக்ஸ்ட்ரி ஷாப் பேக்­கர்ஸ் 13' ஆகி­யவை அடங்­கும்.

ஒரு பரி­வர்த்­த­னை­யில் பய னாளர் எவ்­வ­ளவு தொகை­யை­யும் செலுத்­த­லாம். சேவைக்குக் கட்­ட­ணம் இல்லை என்­று வாட்ஸ்­அப் நிறு­வ­னப் பேச்சாளர் ஸ்ட்­ரெய்ட்ஸ் டைம்­ஸி­டம் தெரி­வித்­தார்.

தொகை செலுத்­தப்­பட்­டதை உறுதி செய்ய, பய­னா­ள­ரின் வாட்ஸ்­அப் பக்­கத்­தில் "உங்­கள் கட்­ட­ணத்­திற்கு நன்றி" எனும் வாச­கம் இடம்­பெ­றும். செய­லி­யில் உள்ள 'ஆர்­டர்' விவ­ரங்­கள் பிரி­வின் 'பேமண்ட்' விவ­ரங்­களில் தங்­கள் பரி­வர்த்­த­னை­யை பய னாளர் சரி­பார்க்­க­லாம்.

"சிங்­கப்­பூ­ரில் உள்ள மக்­களும் வணி­கங்­களும் வாட்ஸ்­அப்­பில் இணை­யும் முறையை இந்த தடை­யற்ற, பாது­காப்­பான அனு­பவம் மாற்­றி­ய­மைக்­கும்," என்று வாட்ஸ்­அப்­பின் உரி­மை­யா­ள­ரான மெட்டா பிளாட்­ஃபார்ம்­ஸின் நிதித் தொழில்நுட்பத் தலை­வர் ஸ்டீ­பன் காஸ்­ரி­யல் கூறி­னார்.

கட்­ட­ணப் பாது­காப்பு நட­வ­டிக்­கை­களில், தொழில்­துறை தரவு பாது­காப்புத் தரங்­க­ளுக்கு இணங்­கும் நம்­ப­க­மான கட்­டணப் பங்­காளி­க­ளு­டன் இணைந்து செயல்­படு­வ­தாக வாட்ஸ்­அப் கூறி­யது. வாட்ஸ்­அப் பய­னா­ளர்­க­ளின் சட்­ட­பூர்வ பெயர், விவ­ரங்­கள் சரி­பார்ப்­புக்குத் தேவை என்றும் பேச்சாளர் கூறி­னார்.

கட்­டண சேவை வழங்­கு­நரான 'ஸ்ட்­ரைப்' புதிய வாட்ஸ்­அப் அம்­சத்தை ஆத­ரிக்­கிறது. சிங்­கப்­பூ­ரில் வாட்ஸ்­அப் வணிகத் தளத்­தைப் பயன்­ப­டுத்­தும் உள்­ளூர் வணி­கங்­கள், வாட்ஸ்­அப்­பில் பணம் செலுத்­தும் தெரி­வைச் செயல்­ப­டுத்­த­லாம்.

இந்­தக் கட்­ட­ணச் சேவை பிரே­சி­லி­லும், இந்­தி­யா­வி­லும் செயல்­பாட்­டில் இருப்­ப­தாக வாட்ஸ்­அப்­பின் இணை­யத்தளம் தெரி­விக்­கிறது.