புக்கிட் பாஞ்சாங் பேருந்து நிறுத்தத்துக்கு அருகே தீப்பிடித்துக்கொண்ட கார்

புக்கிட் பாஞ்சாங் பேருந்து நிறுத்தத்துக்கு அருகே தீப்பிடித்துக்கொண்ட கார்

1 mins read
c0823bab-c35c-42d2-8458-402e7bd69b3d
-

புக்­கிட் பாஞ்­சாங் ரோட்­டில் ஒரு பேருந்து நிறுத்­தத்­துக்கு அருகே ஒரு காரில் திங்­கட்­கி­ழமை மாலை தீப்­பி­டித்­துக்­கொண்­டது. டெலி­கி­ராம் குழு­மத்­தில் பகி­ரப்­பட்ட படங்­க­ள், காணொளி­

க­ள் மூலம் செஞ்சா-கேஷ்யூ சமூக மன்­றத்­துக்கு அருகே இச்­சம்­ப­வம் நிகழ்ந்­தது என்று தெரி­ய­வந்­தது. காரி­லி­ருந்து வெளி­யான கரும்­பு­கை­யைத் தூரத்­தி­லி­ருந்து பார்க்க முடிந்­தது.

சிங்­கப்­பூர் குடி­மைத் தற்­காப்­புப் படை­யின் 'ரெட் ரைனோ' எனும் இல­கு­ரக தீத்­த­டுப்பு வாக­னம், ஒரு தீய­ணைப்பு வாக­னம், இரு காவல்­துறை வாக­னங்­கள் சம்­பவ இடத்­தில் இருந்தன.

சம்­ப­வம் பற்றி மாலை 6 மணி­ய­ள­வில் தனக்கு தக­வல் கிடைத்­தது என்­றும் நீரைப் பீய்ச்­சி­ய­டிக்­கும் சாத­னம், காற்று நுரை ஆகி­ய­வற்­றைக் கொண்டு தீ அணைக்கப்­பட்­டது என்­றும் குடி­மைத் தற்­காப்­புப் படை கூறி­யது. சம்­ப­வத்­தில் எவ­ருக்­கும் காய­மில்லை.