விரிவலை இணையச் சேவை வழங்கும் 'விஸ்காம்ஸ்' நிறுவனம் அதன் கணினிக் கட்டமைப்பு இணையத் தாக்குதலுக்கு உள்ளானதாகவும் இணைய ஊடுருவிகள் வாடிக்கையாளர்களின் தனிப்பட்ட தகவல்களைத் திருடியதாகவும் கூறியிருக்கிறது.
அதுகுறித்து வாடிக்கையாளர்களுக்கு நிறுவனம் மின்னஞ்சல் அனுப்பியுள்ளது.
மின்னஞ்சல் அனுப்பப்பட்ட வாடிக்கையாளர்கள் மட்டுமே பாதிக்கப்பட்டதாக நிறுவனம் கூறியது.
வாடிக்கையாளர்களின் அடையாள அட்டை எண், வேலை அனுமதிச்சீட்டு, வாடகை ஒப்பந்தம் போன்றவை திருடப்பட்டுள்ளன. ஆனால், தொடர்பு எண்களோ கட்டண விவரங்களோ திருடப்பட்டதாகத் தெரியவில்லை என அந்த மின்அஞ்சல் கூறுகிறது.