பொதுமக்களிடம் கருத்துச் சேகரிப்பு

பொதுமக்களிடம் கருத்துச் சேகரிப்பு

1 mins read
0faacec8-5910-452a-a1e9-ce0b1634a69e
-

அண்டை வீட்டினர் இரைச்சல் தொடர்பில் அதிகாரிகள் விசாரணை

அண்டை வீட்­டி­ன­ருக்­குள் இரைச்­சல் தொடர்­பில் ஏற்­படும் சர்ச்­சை­கள் குறித்து விசா­ரணை நடத்­த­வும் அம­லாக்க நட­வ­டிக்­கை­கள் மேற்­கொள்­ள­வும் அர­சாங்க அதி­கா­ரி­க­ளுக்கு அதி­கா­ரம் வழங்­கு­வது குறித்­துப் பரிந்­து­ரைக்­கப் பட்­டுள்­ளது.

இரைச்­சல் ஏற்­ப­டுத்­த­வில்லை என்று ஒரு தரப்­பி­னர் மறுக்­கும்­போது, இரைச்­ச­லைக் கண்­ட­றி­யும் உணர்­க­ரு­வி­க­ளைப் பொருத்தி அதி­கா­ரி­கள் விசா­ரணை­யில் ஈடு­பட இது கைகொடுக்­கும்.

வீட்­டில் தங்­கி­யி­ருப்­போ­ரின் ஒப்­பு­த­லு­டன் வீட்­டிற்­குள் சென்று இரைச்­சல் எங்­கி­ருந்து வரு­கிறது என்­பதை முடி­வு­செய்­யும் அதி­கா­ர­மும் அவர்­க­ளுக்கு வழங்­கப்­படும்.

அதன் அடிப்­ப­டை­யில், இரைச்­சலை நிறுத்­தும்­படி பிரச்­சி­னை­யில் சம்­பந்­தப்­பட்­டோரை அதி­கா­ரி­கள் வலி­யு­றுத்த முடி­யும்.

சம­ர­சப் பேச்­சில் கலந்­து­கொள்­ள­வும் மன­நல சிகிச்சை மேற்­கொள்ள நீதி­மன்­றம் உத்­த­ர­விட்­டால் அதனை நிறை­வேற்­ற­வும் அவர்­களை அதி­கா­ரி­கள் வலி­யு­றுத்த இய­லும்.

விவ­கா­ரங்­களை ஆரம்­பக்­கட்­டத்­தி­லேயே தீர்த்­துக்­கொள்ள இது உத­வக்­கூ­டும்.

சமு­தாய விவ­கா­ரங்­க­ளுக்­குத் தீர்­வு­கா­ணும் தீர்ப்­பா­யத்­தி­டம் கொண்­டு­செல்­லப்­படும் விவ­கா­ரங்­களில் இறுதி முடிவு எட்­டப்­படும்­வரை நீதி­பதி இடைக்­கால உத்­த­ர­வைப் பிறப்­பிக்க முடி­யும்.

சமு­தாய விவ­கா­ரங்­கள் நிர்­வா­கக் கட்­ட­மைப்­பில் பரிந்­து­ரைக்­கப்­படும் இத்­த­கைய மாற்­றங்­கள் குறித்­துக் கருத்­து­ரைக்­கும்­படி பொது­மக்­கள் கேட்­டுக்­கொள்­ளப்­பட்­டுள்­ள­னர்.

அர­சாங்­கத் தலை­யீடு, அதி­கா­ரி­க­ளுக்கு வழங்­கப்­படும் அதி­கா­ரங்­கள், மீண்­டும் மீண்­டும் இரைச்­சல் ஏற்­ப­டுத்­து­வோ­ருக்கு அப­ரா­தம் அல்லது சிறைத்­தண்­டனை விதித்­தல் போன்ற பரிந்­துரை­கள் குறித்­துக் கருத்­துரைக்க விரும்­பு­வோர், go.gov.sg/feedbackcdmf எனும் இணை­யப்­பக்­கத்தை நாட­லாம்.

இன்று முதல் இம்மாதம் 31ஆம் தேதி வரை அவர்கள் கருத்துகளைப் பதிவுசெய்யலாம் எனக் கூறப்பட்டுள்ளது.