வாழ்நாள் காப்புறுதித் திட்டத்தை வாங்கியவர் எண்ணிக்கை குறைவு
பொருளியல் வளர்ச்சி மெதுவடைந்துள்ள நிலையில் 2023ன் முதல் காலாண்டில் வாழ்நாள் காப்புறுதித் திட்டங்களுக்கான விற்பனை குறைந்திருந்தது. இதன்படி புதிதாகப் பதிவான வர்த்தகச் சந்தாக்களின் மதிப்பு $1.05 பில்லியனாக இருந்தது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இது 13.6% குறைவு. இத்தகவலை சிங்கப்பூர் வாழ்நாள் காப்புறுதிச் சங்கம் நேற்று வெளியிட்டது.
அதிகரித்துவரும் வட்டி விகிதங்களும் இச்சரிவுக்குக் காரணமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இதற்கிடையே, கடந்த ஆண்டின் முதல் காலாண்டுடன் ஒப்பிடுகையில் இவ்வாண்டு மேலும் 40,000 சிங்கப்பூரர்கள் மற்றும் நிரந்தரவாசிகள் ஒருங்கிணைந்த காப்புறுதித் திட்டங்களின் மூலம் பலனடைந்துள்ளதாக சங்கத்தின் அறிக்கை தெரிவித்துள்ளது.
அதிபர் தேர்தல்: 50 பொதுச் சேவைத்
துறை பணிகளில் உள்ளோர் நிற்கலாம்
சிங்கப்பூரின் அடுத்த அதிபர் தேர்தலில் நிற்பதற்கான தகுதியைப் பொதுச் சேவைத் துறையின் கிட்டத்தட்ட 50 வேலைகளில் உள்ளோர் பெற்றிருப்பதாக கல்வி அமைச்சர் சான் சுன் சிங் தெரிவித்துள்ளார்.
அதிபர் தேர்தலில் வேட்பாளராக நிற்கத் தகுதியுடைய தனியார்த் துறையினரின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது. 1,200க்கும் மேற்பட்ட நிறுவனங்களுக்குச் சராசரி நிகர மதிப்பு $500 மி. அல்லது அதற்கும் அதிகமாக இருந்ததாக தொகுதியில்லா எம்பி லியோங் மன் வாய் எழுப்பிய நாடாளுமன்றக் கேள்விக்கு திரு சான் பதிலளித்தார்.

