தொடர்பைக் கண்டறிந்த சிங்கப்பூர் ஆய்வாளர்கள்

தொடர்பைக் கண்டறிந்த சிங்கப்பூர் ஆய்வாளர்கள்

2 mins read
04194621-7add-41ec-a353-4fc0f791ff07
-

கொவிட்-19 நோய்க்கான 'எம்ஆர்என்ஏ' தடுப்பூசிக்குப் பிறகு இதயப் பிரச்சினைகள்

கொவிட்-19 கிரு­மித்­தொற்­றுக்கு எதி­ரான 'எம்­ஆர்­என்ஏ' வகை தடுப்­பூ­சி­யைப் போட்­டுக்­கொண்ட சில­ருக்­குப் பக்­க­வி­ளை­வாக இத­யத்­தில் பிரச்­சி­னை­கள் ஏற்­பட்­ட­தற்­கான கார­ணத்தை சிங்­கப்­பூர் ஆய்­வா­ளர்­கள் கண்­ட­றிந்­துள்­ள­தாக நம்­பப்­ப­டு­கிறது.

'டியூக்-என்­யு­எஸ்' மருத்­து­வக் கல்­லூரி ஆய்­வா­ளர்­கள் அடங்­கிய குழு, உட­லில் சுரக்­கும் 'ஆர்­என்­ஏ­எஸ் இ2' எனும் திர­வம் தடுப்­பூ­சிக்­குப் பிறகு இத­யத்­தில் பிரச்­சி­னை­கள் ஏற்­ப­டக் கார­ண­மாய் இருக்­கக்­கூ­டும் என்று கூறி­யுள்­ளது.

சென்ற மாதம் வெளி­யான 'மெட்' எனும் மருத்­துவ சஞ்­சி­கை­யில் இந்­தத் தக­வல் வெளி­யா­கி­யுள்­ளது.

ஆரோக்­கி­ய­மான 42 வயது ஆட­வர், 2021ஆம் ஆண்டு அக்­டோ­ப­ரில் 'மொடர்னா' பூஸ்­டர் தடுப்­பூ­சி­யைப் போட்­டுக்­கொண்­டார். அதற்­கு­முன் இரண்­டு­முறை அவர் 'ஃபைஸர்' நிறு­வ­னத்­தின் தடுப்­பூ­சி­க­ளைப் போட்­டுக்­கொண்­டி­ருந்­தார்.

பூஸ்­டர் தடுப்­பூசி போட்ட முதல் நாள் நன்­றாக இருந்த அவ­ரின் உடல் நிலை நான்­காம் நாளுக்­குள் மோச­மா­னது. ஐந்­தாம் நாள் நெஞ்­சு­வலி ஏற்­பட்­டது. ஆறாம் நாள் மருத்­து­வ­மனை­யில் சேர்ந்து சிகிச்சை பெற்ற அவ­ருக்கு இத­யத் தசை­களில் வீக்­கம் இருப்­பது பரி­சோ­த­னை­யில் கண்­டு­பி­டிக்­கப்­பட்­டது.

எட்­டாம் நாள் வீடு திரும்­பிய ஆட­வர் ஒரு வாரம் கழித்து வழக்­கம்­போல் அன்­றாட வேலை­களை செய்­யத் தொடங்­கி­னார்.

அவ­ரை­யும் சேர்த்து மொத்­தம் 200 பேரி­டம் கொவிட்-19 தடுப்­பூ­சி­க­ளின் பக்­க­வி­ளை­வு­ கு­றித்து தேசிய மருத்­துவ ஆய்­வுக் கழ­கம் ஆய்வு நடத்­தி­யது.

உட­லில் அதிக அளவு 'ஆர்­என்­ஏ­எஸ் இ2' திர­வம் சுரப்­போ­ருக்கு தடுப்­பூ­சிக்­குப் பிறகு இத­யப் பிரச்­சி­னை­கள் ஏற்­ப­டு­வ­தாக அதில் தெரி­ய­வந்­தது.

முந்­தைய ஆய்­வு­கள் நோய் எதிர்ப்­புச் சக்­தி­யும் இதய நோய்­களும் கார­ண­மாக இருக்­க­லா­மெ­னக் கூறின. வருங்­கா­லத்­தில் பாது­காப்­பான தடுப்­பூ­சி­க­ளைத் தயா­ரிக்க அண்மை ஆய்வு முடிவு உத­வக்கூடும்.