2.5 மி. சிங்கப்பூரர்களுக்கு அடுத்த மாதம் வாழ்க்கைச் செலவின உதவித்தொகை

2.5 மி. சிங்கப்பூரர்களுக்கு அடுத்த மாதம் வாழ்க்கைச் செலவின உதவித்தொகை

2 mins read
6b7d9c5f-95c7-474a-906b-445e724f020c
-

சிங்­கப்­பூர் குடும்­பங்­கள் வாழ்க்­கைச் செல­வி­னத்­தைச் சமா­ளிக்க உத­வும் வகை­யில் ஏறக்­கு­றைய 2.5 மில்­லி­யன் சிங்­கப்­பூ­ரர்­க­ளுக்கு அடுத்த மாதம் சிறப்­புத் தொகை வழங்­கப்­ப­ட­வி­ருக்­கிறது.

பண­வீக்­கத்­தை­யும் பொருள், சேவை வரி உயர்­வின் தாக்­கத்­தை­யும் சமா­ளிக்­கப் பொது­மக்­க­ளுக்கு உத­வும் முயற்­சி­க­ளின் ஒரு பகு­தி­யாக இந்­தத் தொகை வழங்­கப்­படும்.

'2023 வாழ்க்­கைச் செல­வின சிறப்­புத் தொகை'யின்­கீழ், அவர்­கள் $400 வரை பெறு­வர் என்று நிதி அமைச்சு நேற்று தெரி­வித்­தது. குறைந்த, நடுத்­தர வரு­மா­னப் பிரி­வி­னர் கூடு­தல் தொகை­யைப் பெறு­வர்.

இவ்­வாண்டு 21 அல்­லது அதற்கு மேற்­பட்ட வயது நிரம்­பி­ய­வர்­க­ளாக அவர்­கள் இருக்க வேண்­டும். வரி மதிப்­பீட்­டுக்­கு­ரிய ஆண்டு வரு­மா­னம் $100,000க்கு­மேல் இருக்­கக்­கூ­டாது. அவர்­கள் ஒரு சொத்­துக்­கு­மேல் வைத்­தி­ருக்­கக்­கூ­டாது.

ஒரு­முறை வழங்­கப்­படும் தொகை­யாக $200க்கும் $400க்கும் இடைப்­பட்ட தொகையை அடுத்த மாதம் அவர்­கள் பெற்­றுக்­கொள்­வர்.

அவர்­கள் வசிக்­கும் வீட்டு வகை எது­வாக இருந்­தா­லும் இந்­தத் தொகை வழங்­கப்­படும்.

மேலும், ஏறக்­கு­றைய 850,000 முதி­­யோர்க்­குக் கூடு­தல் தொகை­யாக வழங்­கப்­படும். இவ்­வாண்டு 55 அல்­லது அதற்கு மேற்­பட்ட வய­து­ நிரம்பியோர்க்கு $200 முதல் $300 வரையிலான தொகை வழங்­கப்­படும்.

இதற்கு அவர்­க­ளது வரி மதிப்­பீட்­டுக்­கு­ரிய ஆண்டு வரு­மா­னம் $34,000க்கு­மேல் இருக்­கக்­கூடாது. அவர்­கள் குடி­யி­ருக்­கும் வீட்­டின் ஆண்டு மதிப்பு $21,000ஐத் தாண்­டக்­கூ­டாது. அவர்­கள் ஒரு சொத்­துக்­கு­மேல் வைத்­தி­ருக்­கக்­கூ­டாது.

இத்­திட்­டத்­தில் பங்­கு­பெ­றும் 10 வங்­கி­களில் கணக்கு வைத்­தி­ருப்­போர் இம்­மா­தம் 23ஆம் தேதிக்­குள் 'பேநவ்' உடன் அடை­யாள அட்டை எண்ணை இணைக்­கும்­படி ஆலோ­சனை கூறப்­பட்டு உள்­ளது. சிறப்­புத்­தொ­கையை ஜூன் 7க்குள் பெற அது உத­வும்.

மத்­திய சேம­நி­திக் கழ­கத்­தி­டம் வங்­கிக் கணக்­கைப் பதிந்­தி­ருந்­தால் ஜூன் 15க்குள் பெற­லாம்.

'கவ்­கேஷ்' மூலம் பெறு­வோர் ஜூன் 20 முதல் ஓசி­பிசி தானி­யக்க வங்கி இயந்­தி­ரங்­களில் பெற்­றுக்­கொள்­ள­லாம். இதற்கு ஓசிபிசி வங்கியில் கணக்கு வைத்திருக்கத் தேவையில்லை.