போதைப்பொருள் பறிமுதல்

போதைப்பொருள் பறிமுதல்

1 mins read
9ac5f4fb-ca70-414f-b8e7-7af65765359a
-

சிங்கப்பூரில் இருந்து பினாங்கு சென்ற போர்ச்சுக்கீசியக் கப்பலில் இருந்து மலேசிய அதிகாரிகள் ஒரு டன் எடையுள்ள 'எக்ஸ்டஸி' போதை மாத்திரைகளை கைப்பற்றியுள்ளனர். அவற்றின் மொத்த மதிப்பு $22.6 மில்லியன். சென்ற மாதம் 23ஆம் தேதி சிங்கப்பூரில் இருந்து கிளம்பிய கப்பல் 25ஆம் தேதி பினாங்கு சென்றது. பெல்ஜியத்திலிருந்து மார்ச் 14ஆம் தேதி புறப்பட்ட ஹாங்காங் கப்பலில் கொண்டுவரப்பட்ட கொள்கலன் ஒன்று சிங்கப்பூரில் போர்ச்சுக்கீசியக் கப்பலுக்கு மாற்றப்பட்டது. கொள்கலனில் கொண்டுசெல்லப்பட்ட இயந்திரங்களுக்கு இடையே போதைப்பொருள் மறைத்து வைக்கப்பட்டிருந்ததாகக் கூறப்பட்டது.