வீடு அல்லது அலுவலக இணையக் கட்டமைப்பில் செயல்பாட்டைத் தாமதப்படுத்தாமல் அதிக சாதனங்களை இணைக்க அனுமதிக்கும் வகையில் சிங்கப்பூரில் புதிய 'வைஃபை' தரநிலை வெளியிடப்படுகிறது. புதிய தரநிலை கைப்பேசிகள், இயந்திர மனிதர்கள் போன்றவற்றின் விரைவான செயல்பாட்டை உறுதியளிக்கிறது.
அண்மைய 'வைஃபை 6E' தரநிலையைப் பயன்படுத்த வசதியாக 6GHz அலைவரிசையில் புதிய அலைக்கற்றைகளை ஒதுக்குவதாக துறை ஒழுங்குமுறை அமைப்பான தகவல்தொடர்பு ஊடக மேம்பாட்டு ஆணையம் (ஐஎம்டிஏ) நேற்று தெரிவித்தது.
பயனாளர் சாதனங்களின் எண்ணிக்கை அதிகரிப்பும் செயலிகள் அதிநவீனமாக மாற்றம் காண்பதும் செயல்பாட்டை தாமதமாக்கலாம். கூடுதலான வசதி இதனை விரைவுபடுத்தும் என்று ஐஎம்டிஏ கூறியது.
தற்போதைய வைஃபை வேகம் அதிகபட்சமாக 4.8Gbps வரை செல்லலாம், ஆனால் பரந்த 160MHz அலைவரிசை களுடன், அதிகபட்ச வேகத்தை 9.6Gbps ஆக இரட்டிப்பாக்கலாம்.
வேகமான வேகத்தில் தரவு பரிமாற்றத்தையும் செயல்படுத்த முடியும்.