அன்­னை­யர் தினம்: புக்­கிட் பாஞ்­சாங்கில் கொண்டாட்டம்

அன்­னை­யர் தினம்: புக்­கிட் பாஞ்­சாங்கில் கொண்டாட்டம்

1 mins read
6864bba6-9f2b-47d8-8df3-3f9c291f3604
-

புக்­கிட் பாஞ்­சாங் வட்­டா­ரத்­தில் அன்­னை­யர் தினக் கொண்­டாட்­டம் இம்­மா­தம் 7ஆம் தேதி இடம்­பெற்­றது.

புக்­கிட் பாஞ்­சாங் சமூக மன்ற குடி­யி­ருப்­பா­ளர் ஒருங்­கி­ணைப்பு குழு ஏற்­பாடு செய்த அன்­னை­யர் தின நிகழ்­வில் சுமார் 300 பேர் கலந்துகொண்­ட­னர்.

புக்­கிட் பாஞ்­சாங் தனித் தொகுதி நாடா­ளு­மன்ற உறப்­பினர் திரு லியாங் எங் ஹுவா சிறப்பு விருந்­தி­ன­ராக கலந்­து­கொண்டு சிறப்­பு­ரை­யாற்­றி­னார்.

புக்­கிட் பாஞ்­சாங்­கில் பல இன மக்­களும் இணைந்து பங்­கேற்று அன்­னை­யர் தினத்­தில் அன்­னை­யர்­க­ளுக்கு வாழ்த்து கூறி அன்பை வெளிப்­ப­டுத்­தி­யது மறக்க முடி­யா­தது என்று அவர் கூறி­னார்.

நிகழ்ச்­சி­யில் இடம்­பெற்ற சீன, மலாய், மியான்­மார், தாய்­லாந்து போன்ற பல­த­ரப்­பட்ட கலை அங்­கங்­கள் கவர்ந்­தன என்று புக்­கிட் பாஞ்­சாங் சமூக மன்ற குடி­யி­ருப்­பா­ளர் ஒருங்­கி­ணைப்பு குழுத் தலை­வர் திரு மூர்த்தி கூறி­னார்.