நாணய ஆணைய தலைமைப் பொறுப்பில் மேனன் தொடர்வார்

நாணய ஆணைய தலைமைப் பொறுப்பில் மேனன் தொடர்வார்

1 mins read
c9092551-8176-4a1d-b356-c8c81a1256e7
-

சிங்­கப்­பூர் நாணய ஆணையத்­தின் நிர்­வாக இயக்­கு­ந­ரான திரு ரவி மேனன், அந்­தப் பொறுப்­பில் மேலும் இரண்டு ஆண்டு களுக்கு நிய­மிக்­கப்­பட்டு உள்ளார்.

திரு மேன­னுக்கு இந்த ஆண்டு வயது 59 ஆகிறது. அவர் அந்­தப்­ பொ­றுப்­பில் 2011ஆம் ஆண்டு முதல் இருந்து வரு­கி­றார்.

அவ­ரின் தற்போ­தைய பத­விக்காலம் இந்த மாதம் 31 ஆம் தேதி­யு­டன் முடிவடைகிறது. அத்­து­டன் அவர் ஆணையத்­தில் இருந்து வில­கி­வி­டு­வார் என்று ஊகச் செய்­தி­கள் தெரி­வித்­தன.

ஆணை­யத்­தின் நிர்­வாக இயக்­கு­நர் பொறுப்­பில் ஆக அதிக காலம் இருந்து வரும் திரு மேனன், பொதுச் சேவை­யில் இருந்து ஓய்­வு­பெ­றும் வரை அல்­லது 2025ஆம் ஆண்டு மே 31ஆம் தேதி வரை அந்­தப் பொறுப்­பில் மீண்­டும் நிய­மிக்­கப்­பட்டு இருக்­கி­றார் என்று ஆணை­யம் தனது அறிக்கையில் நேற்று தெரி­வித்­தது.

திரு மேனன் ஆணை­யத்­தின் நிர்­வா­கச் சபை உறுப்­பி­ன­ராக ஜூன் 1ஆம் தேதி முதல் 2025 மே 31ஆம் தேதி வரை மீண்­டும் நிய­மிக்­கப்­பட்டு இருப்­ப­தா­க­வும் அறிக்கை தெரி­வித்­தது.

தலை­மைச் சட்ட அதி­காரி லூசி­யன் வோங், 'நெட்­லிங்க் என்­பி­என் மேனேஜ்­மெண்ட்' நிறு­வ­னத்­தின் தலை­வ­ரான சாலி மா இரு­வ­ரும் ஆணை­யத்­தின் நிர்­வா­கச் சபை உறுப்­பி­ன­ராக 2026 மே 31ஆம் தேதி வரை மூன்­றாண்டு காலத்­திற்கு மீண்­டும் நிய­மிக்­கப்­பட்டு உள்­ள­தாகவும் அறிக்கை தெரிவித்தது.