மின்னிலக்க மிரட்டல்: 'வலுவான அரண்களை உருவாக்குங்கள்'

1 mins read
946a9667-365d-4752-8648-55d6ce71ed6a
-

இந்­தக் கால­கட்­டத்­தில் மக்­க­ளின் அன்­றாட வாழ்­வில் தொழில்­நுட்­பங்­கள் அதி­கம் ஒருங்­கி­ணைந்து வரு­கின்­றன. இப்­ப­டிப்­பட்ட சூழ­லில் சட்­ட­வி­ரோ­தப் பேர்­வ­ழி­கள் தொழில்­நுட்­பத்தைத் தங்­கள் கெட்ட நோக்­க­ங்க­ளுக்­கா­கப் பயன்­படுத்­திக்கொள்­கி­றார்­கள்.

சிங்­கப்­பூரை பாது­காப்பு மிக்க இட­மாக வைத்­தி­ருக்க வேண்­டும் என்­றால் சிங்­கப்­பூர் அமைப்­பு­கள் வலு­வான ஆற்­றல் அரண்­களை உரு­வாக்க வேண்­டும் என்று மூத்த அமைச்­சர் டியோ சீ ஹியன் வலி­யு­றுத்­தி­னார்.

உத்­தி­பூர்வ தக­வல்­தொ­டர்பு தொழில்­நுட்ப நிலை­யத்­தின் 20வது ஆண்டு விழா­வில் பேசிய திரு டியோ, சிங்­கப்­பூர் பல வகை இணைய உலக மிரட்­டல்­க­ளைச் சமா­ளிக்க வேண்­டும் என்றார்.

சாட்-ஜிபிடி போன்ற அதி­ந­வீன தொழில்­நுட்­பங்­கள் மேலும் பர­வ­லா­கப் பயன்­ப­டுத்­தப்­படும்போது உண்­மை­யான தக­வல்­க­ளுக்­கும் போலி தக­வல்­க­ளுக்­கும் இடையே வேறு­பாடு தெரி­யாத அள­வுக்கு அதி­ந­வீன தில்­லு­முல்­லு­கள் இடம்­பெ­றலாம் என்றார் திரு டியோ.

அந்நிகழ்ச்­சி­யில் தற்­காப்பு அமைச்­சர் இங் எங் ஹென் உட்பட 90 பேர் பங்கேற்றனர்.