துர்நாற்றம்: மனுவைத் தொடர்ந்து கழகம் நடவடிக்கை

2 mins read
a098325d-5dd0-4740-a917-30937feb0582
-

வீட­மைப்பு வளர்ச்­சிக் கழ­கத்­தின் பிடிஓ வீடு­கள் ஈசூ­னில் கட்­டப்­பட்டு வரு­கின்­றன.

அந்­தக் கட்­டு­மான இடத்­தின் குப்­பைக்கூடம் உள்ள இடத்­தில் இருந்து துர்­நாற்­றம் வரு­வ­தாக பக்­கத்­தில் இருக்­கும் கூட்­டு­ரிமை புளோக்­கில் வசிக்­கும் மக்­கள் புகார் தெரி­வித்­த­னர்.

அதை அடுத்து கழ­கம் குப்­பைக்கூடத்­தின் வழியை வேறு பக்­கத்­திற்கு மாற்­றி­வி­டும்.

அங்கு சென்று குப்­பையை அள்­ளிச்­செல்­லும் வாக­னங்­களுக்­காக புதிய வழி­யை­யும் கழ­கம் அமைக்­கும்.

இத­னால் அந்த வாக­னங்­கள் ஸ்கைஸ் மில்­டோ­னியா என்ற அந்­தக் கூட்­டு­ரிமை புளோக்­கிற்கு அருகே செல்­லா­மல் வில­கிச்­செல்­லும்.

அந்­தக் கட்­டு­மான இடத்­தில் 1,334 வீடு­கள் கட்­டப்­பட்டு வரு­கின்­றன. அவற்­றின் விற்­பனை சென்ற ஆண்­டில் நவம்­ப­ரில் தொடங்­கி­யது.

அந்த வீடு­க­ளுக்­கான தற்­கா­லிக அனு­போக அனு­மதி 2029 ஜூன் மாதம் கொடுக்­கப்­படும் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.

மொத்­தம் 66 வீட்டு உரிமை­யா­ளர்­கள் மனுவில் கையெ­ழுத்­திட்டு அதை வீவக அதிகாரிகள் இடத்­தி­லும் தங்கள் நாடா­ளு­மன்ற உறுப்பி­ன­ரான டெரிக் கோவி­டத்­தி­லும் (நீ சூன் குழுத்­தொ­குதி) மார்ச் 21ஆம் தேதி தாக்­கல் செய்­த­னர்.

ஈசூ­னில் கட்­டப்­படும் மில்­டோ­னியா பிரீஸ் என்ற பிடிஓ திட்ட வீடு­க­ளின் கட்­டுமான இடத்­தின் குப்­பைக்கூடத்தை அகற்­றும்­படி அந்த மனு கேட்டுக்­கொண்­டது.

மின்­னஞ்­சல் மூலம் இது தெரி­ய­வந்­த­தாக ஸ்ட்­ரெய்ட்ஸ் டைம்ஸ் குறிப்­பிட்­டது.

இதன் தொடர்­பில் கருத்து கூறிய கழ­கம், திரு கோ, அடித்­தளத் தலை­வர்­கள் ஆகி­யோ­ரு­டன் சேர்ந்து செயல்­பட்டு, மில்­டோ­னியா குடி­யி­ருப்­பா­ளர்­களை ஈடு­ப­டுத்தி அவர்களின் இந்தக் கவ­லையைப் போக்க தான் செயல்­பட்டு வரு­வ­தா­கத் தெரி­வித்­தது.