தெண்டாயுதபாணி கோயிலில் ஜூன் 1ஆம் தேதி குடமுழுக்கு

தெண்டாயுதபாணி கோயிலில் ஜூன் 1ஆம் தேதி குடமுழுக்கு

3 mins read
6f897633-361b-4e6a-b86e-385de6d4a8f7
-

கி.ஜனார்த்­த­னன்

டேங்க் ரோட்­டில் உள்ள அருள்­மிகு தெண்­டா­யு­த­பாணி கோயி­லின் குட­மு­ழுக்கு ஜூன் 1ஆம் தேதி நடை­பெ­ற­வுள்­ளது.

கடந்த ஆண்டு ஜூனில் தொடங்­கிய ஆல­யப் புதுப்­பிப்­புப் பணி­கள் தற்­போது நிறை­வு­பெறும் கட்­டத்­தில் உள்­ளன. குட­முழுக்கு தினத்­தன்று கிட்­டத்­தட்ட 15,000 பக்­தர்­களை வர­வேற்க ஆல­யம் தயா­ராகி வரு­வ­தாக கோயி­லின் நிர்­வா­கக் குழு­வி­னர் தெரி­வித்­து உள்ளனர்.

நேற்று நடை­பெற்ற செய்­தி­யாளர் கூட்­டத்­தில் அவர்கள் இந்த விவ­ரங்­க­ளைப் பகிர்ந்தனர்.

பக்­தர்­க­ளுக்கு உணவு பரி­மாறு­வ­தற்­காக 1,000 இருக்­கை­களுக்­கான இட­வ­சதி உடைய கூடா­ரம் ஒன்று ரிவர் வேலி ரோட்­டி­லுள்ள திறந்­த­வெ­ளி­யில் அமைக்­கப்­படும். முதி­யோ­ருக்கும் உடற்­கு­றை­யுள்­ளோ­ருக்­கும் சிறப்பு வச­தி­கள் அமைக்­கப்­பட்­டுள்­ளன.

குட­மு­ழுக்­குக்­காக 1,000 தொண்­டூ­ழி­யர்­கள் பணி­யில் ஈடு­ப­டுத்­தப்­ப­டு­வர். வானிலை நிகழ்வு, அவ­ச­ர­நிலை சூழ­லுக்­கும் அவர்­கள் ஆயத்த நிலை­யில் இருப்­ப­தாக ஆலய நிர்­வா­கக் குழு­வி­னர் கூறி­னர்.

பிர­த­மர் லீ சியன் லூங் குட­மு­ழுக்கு நிகழ்­வில் சிறப்பு விருந்­தி­ன­ராக கலந்­து­கொள்­வார் என்று தெரி­விக்­கப்­பட்டது. அவ­ரு­டன் சட்ட, உள்­துறை அமைச்­சர் கா.சண்­மு­கம், கலா­சார, சமூக இளை­யர்­துறை அமைச்­ச­ரும் சட்ட இரண்­டாம் அமைச்­ச­ரு­மான எட்­வின் டோங், நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் ஜோன் பெரேரா ஆகி­யோ­ரும் வருகை புரி­வர் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.

பன்­னி­ரண்டு ஆண்­டு­களுக்கு ஒரு­முறை ஆல­யங்­களில் குட­முழுக்கு நடத்­தப்­ப­டு­கிறது. 2009ல் இக்­கோ­யி­லில் கடை­சி­யாக குட­மு­ழுக்கு நடத்­தப்­பட்­டது. 165 ஆண்டு பழ­மை­வாய்ந்த இந்­தக் கோயில், 2014ல் தேசிய நினைவுச் சின்­ன­மாக அறி­விக்­கப்­பட்ட பிறகு நடத்­தப்­படும் முதல் குட­மு­ழுக்கு இது.

2020ல் புதுப்­பிப்­புப் பணி­களுக்கு திட்­ட­மிட்­ட­போது பக்­தர்­கள், ஆல­யத் தொண்­டர்­கள், அர்ச்­ச­கர்­கள், ஊழி­யர்­கள் ஆகி­யோ­ரு­டன் கலந்­து­ரை­யாடி அவர்­க­ளது கருத்­து­க­ளையும் யோசனைகளையும் கருத்­தில்­கொண்­ட­தாக ஆலய நிர்­வாகக் குழு தெரி­வித்­தது. ஆல­யத்­தின் புதுப்­பிப்­புப் பணி­க­ளுக்­கான செலவு சுமார் $1 மில்­லி­யன்.

ஆல­யத் தூண்­க­ளி­லும் சந்­நிதி­க­ளி­லும் ஐந்து நிறங்­க­ளால் ஆன ஐவண்ணச் சாயங்­கள் பூசப்­பட்­டுள்­ளன. அத்­து­டன், ஆல­யத் தரை­யில் தாமரை வடி­வங்­களுக்­கான கற்­கள் பளிங்­கி­ல் இ­ருந்து 'கிரே­னைட்'டாக மாற்­றப்­பட்­டுள்­ளன. ஆல­யத்­திற்­குள் தெய்­வத் திரு­வு­ரு­வங்­க­ளைக் கொண்ட 48 கண்­ணா­டிச் சன்­னல்­களும் மாற்­றப்­பட்­டுள்­ளன.

ஆல­யத்­தின் திரு­மண மண்ட­பமும் மடப்­பள்­ளி­யும் தற்­போது விரி­வு­வாக்­கம் காண்­ப­தா­க­வும் அதற்­கு­ரிய பணி­கள் ஆண்­டி­று­திக்­குள் நிறை­வே­றும் என்­றும் கட்­ட­டக்­குழு உறுப்­பி­னர் ச.வெங்­க­டா­ச­லம், 54, தெரி­வித்­தார்.

திரு­மண மண்­ட­பம், நாட்­டுக்­கோட்டை நக­ரத்­தார் சமூ­கத்­தி­ன­ரின் செறி­வு­மிக்க பாரம்­ப­ரிய கலைக்­கூ­று­கள் நிறைந்த அழ­கிய உட்­பு­றத்­து­டன் அதி­ந­வீன ஒலி, ஒளி வச­தி­க­ளைக் கொண்­டி­ருக்­கும்.

"மண்­ட­பத்­தின் பார்­வை­யா­ளர் பகுதி ஓர் அடுக்­கிற்­குப் பதி­லாக ஈர­டுக்­கு­க­ளைக் கொண்­டி­ருக்­கும். பழைய மண்­ட­பத்­தில் 500 பேர் வரை திரு­ம­ணத்தை அமர்ந்து காண முடிந்­தது. ஆனால், புதிய மண்­ட­பத்­தில் 700 பேர் வரை அம­ர­லாம்," என்று திரு வெங்­க­டா­ச­லம் கூறி­னார்.

குட­மு­ழுக்­கிற்­காக டேங்க் ரோடு மே 31ஆம் தேதி இரவு 9 மணி முதல் ஜூன் 1 ஆம் தேதி இரவு 9 மணி வரை மூடப்­பட்­டு இ­ருக்­கும். கிள­மென்­சியூ அவென்யூ, ரிவர் வேலி ரோடு ஆகி­யவை பின்­னி­ரவு 1 மணி முதல் மாலை 5 மணி வரை மூடப்­பட்­டி­ருக்­கும்.

பக்­தர்­க­ளுக்­கான உணவு காலை 10 மணி­யி­லி­ருந்து பரி­மா­றப்­படும் என்று கூறிய ஆல­யத் தலை­வர் எம்.சாமி­நா­தன், குட­முழுக்கை நேரில் சென்­று­காண முடி­யா­த­வர்­கள் இணை­யம் மூலம் நேர­லை­யில் காண­லாம் என்­றும் கூறி­னார்.