தலைகவிழ்ந்தவாறு சாலையை கடக்கும் அலட்சியம், ஆபத்து

தலைகவிழ்ந்தவாறு சாலையை கடக்கும் அலட்சியம், ஆபத்து

2 mins read
1ec59774-6e75-4036-93db-884c1fe4ea30
-

கைப்­பே­சி­யைப் பார்த்­த­வாறே தலை­க­விழ்ந்த நிலை­யில் சாலை­யைக் கடக்­கும் ஆபத்­தான போக்கு பற்றி 'ஸ்ட்­ரெய்ட்ஸ் டைம்ஸ்' செய்­தித்­தாள் கருத்து திரட்டி இருக்­கிறது.

சிங்­கப்­பூ­ரின் முக்­கி­ய­மான மூன்று சாலைகளிலும் ஒரு சாலை சந்­திப்­பிலும் கடந்த வாரம் அதன் செய்­தி­யா­ளர்­கள் நேர­டி­யா­கச் சென்­ற­போது பல­ரும் அந்த ஆபத்­தைச் சுமந்துகொண்டு இருந்ததைக் கண்­ட­னர்.

காத்­திப் எம்­ஆர்டி நிலை­யத்­திற்கு வெளியே உள்ள ஈசூன் ரிங் ரோடு, மத்­திய வர்த்­தக வட்­டா­ரத்­தில் உள்ள பேட்­டரி ரோடு, ஹாலந்து ரோடு கடைத்­தொ­குதி­யின் முன்­னால் உள்ள ஹாலந்து அவென்யூ, ஆர்ச்­சர்ட் ரோட்­டில் நீ ஆன் சிட்­டிக்­கும் பேரகான் கடைத்­தொ­கு­திக்­கும் இடைப்­பட்ட சாலைச் சந்­திப்பு ஆகிய இடங்­களில் அந்­தக் கள ஆய்வு நடத்­தப்­பட்­டது. தலை கவிழ்ந்­த­வாறு சாலை­யைக் கடந்த சிலரை செய்­தி­யா­ளர்­கள் சந்­தித்­துப் பேசி­னர்.

ஹாலந்து அவென்­யூ­வில் உள்ள சாலை­யைக் கடந்த இங், 25, என்­ப­வர், சாலைப் பாது­காப்பை அலட்­சி­யப்­ப­டுத்­து­வது ஆபத்­தா­னது என்­பது தெரிந்­தும் தம்­மால் இந்­தப் பழக்­கத்தை மாற்ற இய­ல­வில்லை என்­றார்.

"எனது கைப்­பே­சியை எடுத்­த­துமே என்­னை­யும் அறி­யா­மல் எனது விரல்­கள் இன்ஸ்­ட­கி­ரா­மைத் திறந்­து­வி­டு­கின்­றன," என்­றார் அந்த இளை­யர்.

ஆர்ச்­சர்ட் ரோட்­டைக் கடந்த திரு­மதி யூனிஸ் ஹஸிகா, 23, தமது காது­களில் இசை கேட்­கும் கரு­வியை மாட்டி இருந்­தார். சாலைக் கடக்­கும்­போது கைப்­பேசி­யைப் பயன்­ப­டுத்­தி­னா­லும் இரு­பு­ற­மும் கார்­கள் வர­வில்லை என்­பதை உறு­திப்­ப­டுத்­திக்­கொள்­வேன்," என்­றார் அவர்.

இவர்­க­ளைப்போல பல­ரும் காலை உச்­ச­நே­ரத்­தில் ஈசூன் ரிங் ரோட்­டி­லும் மதிய உணவு வேளை­யில் பேட்­டரி ரோட்­டி­லும் மனம்­போன போக்­கில் சாலை­க­ளைக் கடந்­ததை செய்­தி­யா­ளர்­கள் கண்­ட­னர். கடு­மை­யான போக்கு­வ­ரத்து நெரி­ச­லி­லும்­கூட கைப்­பே­சி­களில் கவ­னம் செலுத்­தி­ய­வாறு சிலர் சாலை­க­ளைக் கடந்­த­னர். அத­னால், சில வாகன ஓட்­டு­நர்­கள் பல­வந்­த­மாக தங்­க­ளது வாக­னங்­களை நிறுத்த வேண்­டிய கட்­டா­ய­மும் ஏற்­பட்­டது. பெண்­மணி ஒரு­வர் கைப்­பே­சி­யைப் பார்த்­த­வாறே இரண்டு ஈர­டுக்­குப் பேருந்­து­க­ளி­னூடே சாலை­யைக் கடந்த சம்­ப­வ­மும் நிகழ்ந்­தது.

கடந்த மாதம் அல்­ஜு­னிட் ரோடு-சிம்ஸ் அவென்யூ சந்­திப்­பில் 52 வயது பாத­சாரி ஒரு­வர் கார் மோதி­ய­தில் உயி­ரி­ழந்­தார். இச்­சம்­ப­வம் குறித்து மரண விசா­ரணை அதி­காரி ஆதம் நகோடா விளக்­கம் அளித்­தார். போக்­கு­வரத்து விளக்கு எரிந்­த­போது கைப்­பே­சி­யைப் பார்த்­த­வாறே சாலை­யைக் கடந்த அந்த ஆட­வர், மனம் போன போக்­கில் சாலை­யைக் கடக்­கும் பிறரை ஓரக்­கண்­ணால் கவ­னித்­த­வாறே அவர்­க­ளைப் பின்­தொ­டர்ந்­த­போது கார் மோதி மர­ண­முற்­ற­தாக அவர் தெரி­வித்திருந்­தார்.