எம்ஆர்டி ரயிலில் சண்டையிட்ட இரண்டு ஆடவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வியாழக்கிழமை இரவு ஆர்ச்சர்ட் எம்ஆர்டி நிலையத்தில் ரயில் நின்றபோது நிகழ்ந்த அந்த கைகலப்பைக் காட்டும் காணொளி மறுநாள் சமூக ஊடகங்களில் பரவியது.
கருநீல நிறச் சட்டை அணிந்த ஆடவர் ஒருவர் ரயிலின் தரையில் விழுந்த நிலையில் மற்றோர் ஆடவரை குத்துவதும் உதைப்பதும் அதில் தெரிந்தது.
ஒரு கட்டத்தில், அந்த இரண்டாம் ஆடவர் கருநீலச் சட்டை ஆடவரின் கழுத்தைப் பிடித்ததும் அவர் தமது கால்களால் இரண்டாம் ஆடவரின் கழுத்தை பின்னிக்கொண்டார்.
அவ்விருவரின் காலணிகளும் பை ஒன்றும் அருகே சிதறிக் கிடந்தன. பயணிகள் இருவர் சண்டையை விலக்க முயன்றனர்.
வியாழன் இரவு 10.45 மணியளவில் இச்சம்பவம் குறித்துத் தனக்குத் தகவல் கிடைத்ததாகவும் 33 மற்றும் 35 வயதுடைய ஆடவர்கள் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்படுவதாகவும் 'ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்' செய்தித்தாளிடம் காவல்துறை தெரிவித்தது.
காவல்துறையின் விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்கி வருவதாக எஸ்எம்ஆர்டி கூறியது.

