செம்பவாங்கில் சாலை ஒன்றில் ஆடவர் ஒருவர் நிர்வாணமாக படுத்து இருந்ததை வெள்ளிக்கிழமை எஸ்ஜிஃபாலோசால் என்ற இன்ஸ்டகிராம் பக்கத்தில் வெளியான ஒரு காணொளி காட்டியது. அதை அடுத்து 34 வயது ஆடவர் கைதானார். செம்பவாங் ரோட்டில் வெள்ளிக்கிழமை அதிகாலை 2.40 மணிக்கு உதவி கேட்டு தனக்குத் தகவல் வந்ததாக காவல்துறை தெரிவித்தது. புலன்விசாரணை நடந்துவருகிறது. பொது இடத்தில் நிர்வாணமாக தோன்றியதன் தொடர்பில் யாராவது குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்டால் அவருக்கு மூன்று மாதம் வரை சிறை, $2,000 வரை அபராதம் அல்லது இரண்டும் விதிக்க முடியும்.
சாலையில் நிர்வாணமாக படுத்து இருந்தார்; ஆடவர் கைது
1 mins read
செம்பவாங்கில் சாலை ஒன்றில் ஆடவர் ஒருவர் நிர்வாணமாக படுத்து இருந்ததைக் காட்டும் காணொளி இன்ஸ்டகிராமில் வெளியானது. படம்: எஸ்ஜிஃபாலோசால்/இன்ஸ்டகிராம் -

