தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

செந்தோசாவில் பிளாஸ்டிக் போத்தலுக்குப் பிரியாவிடை

1 mins read
32bd2e95-4890-43f9-abae-4d3d8df9616e
ஸ்ட்ரைட்ஸ் டைம்ஸ் கோப்புப்படம்: -

செந்தோசா தீவில் செயல்படும் ஹோட்டல்கள், உணவு, பானக் கடைகள், கவர்ச்சி இடங்கள் அனைத்தும் இந்த ஆண்டு முடிவில் பிளாஸ்டிக் தண்ணீர் போத்தல்களுக்குப் பிரியாவிடை கொடுத்துவிடும். இதனால் ஆண்டுக்கு ஒன்றுக்கு குறைந்தது இரண்டு மில்லியன் போத்தல்கள் மிச்சமாகும். ஹோட்டல் அறைகளில், நிகழ்ச்சிகளில், சாப்பிடும் இடங்களிலும் வாங்கி எடுத்துச்செல்லவும் இனி பிளாஸ்டிக் தண்ணீர் போத்தல் கொடுக்கப்படமாட்டா என்று செந்தோசா வளர்ச்சிக் கழகம் தெரிவித்ததாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் குறிப்பிட்டது. தனது மறுசுழற்சி விகிதம் 2016ஆம் ஆண்டில் 7.5% ஆக இருந்தது என்றும் அது இரண்டு மடங்காகி 2022ஆம் ஆண்டில் 7.5% ஆகியது என்றும் கழகம் குறிப்பிட்டது. இருந்தாலும் ஒரு முறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருள்களைக் குறைக்க மேலும் பலவற்றைச் செய்ய முடியும் என்றும் அது தெரிவித்தது.

குறிப்புச் சொற்கள்