இந்தோனீசியாவில் இருந்து உயிருள்ள கோழிகள் இறக்குமதி

இறைச்­சிக்­காக வளர்க்­கப்­படும் ‘பிராய்­லர்’ கோழி­களை இந்­தோ­னீ­சி­யா­வில் இருந்து இறக்­கு­மதி செய்­யத் தொடங்­கி­யுள்­ளது சிங்­கப்­பூர். அவை உயி­ரு­டன் இறக்­கு­மதி செய்­யப்­ப­டு­கின்­றன.

பற­வைக் காய்ச்­சல் அற்­ற­தாக அறி­விக்­கப்­பட்­டி­ருக்­கும் பண்ணை ஒன்­றில் இருந்து கோழி­கள் நேற்று முன்­தி­னம் காலை சிங்­கப்­பூர் வந்­த­டைந்­தன.

நீடித்த நிலைத்­தன்மை, சுற்­றுப்­புற துணை­ய­மைச்­சர் கோ போ கூன் நேற்று ஃபேஸ்புக்­கில் இத்­த­க­வ­லைப் பதி­விட்­டார்.

இந்­தோ­னீ­சி­யா­வில் இருந்து உயி­ருள்ள கோழி­கள் சிங்­கப்­பூ­ருக்கு இறக்­கு­மதி ஆவது இதுவே முதல்­முறை. இதற்கு முன்­னர் மலே­சி­யா­வில் இருந்து மட்­டுமே உயி­ருள்ள கோழி­கள் இறக்­கு­மதி செய்­யப்­பட்டு வந்­தன.

இந்­தோ­னீ­சி­யா­வில் இருந்­தும் இப்­போது இறக்­கு­மதி செய்­வ­தால், சிங்­கப்­பூர் அதன் இறக்­கு­மதி­யைப் பன்­மு­கப்­ப­டுத்­தி­யுள்­ளது. கோழி இறைச்சி விநி­யோ­கத்தை மீட்­டெ­டுக்­கும் நட­வ­டிக்­கையை வலுப்­ப­டுத்­த­வும் இது உத­வும் என்றார் டாக்­டர் கோ.

சிங்கப்பூர் அதன் தேவைக்­கான 34 விழுக்­காட்டு கோழி இறைச்­சியை மலே­சி­யா­வில் இருந்து இறக்­கு­மதி செய்­து­வந்த நிலையில், சென்ற ஆண்டு ஜூன் முதல் அக்­டோ­பர் மாதம் வரை மலே­சியா கோழி ஏற்­று­ம­தி­யைத் தடை செய்­தது.

விலை உயர்­வை­யும் கோழி இறைச்­சிப் பற்­றாக்­கு­றை­யை­யும் சமா­ளிப்­பது அதன் நோக்­கம்.

இதை­ய­டுத்து, பிரே­சில், தாய்­லாந்து ஆகி­ய­வற்­றில் இருந்து இறக்­கு­ம­தி­யா­கும் கோழி இறைச்­சி­யின் அளவை அதி­க­ரித்­தது சிங்­கப்­பூர்.

குளி­ரூட்­டப்­பட்ட, உறை­ய­வைக்­கப்­பட்ட, பதப்­ப­டுத்­தப்­பட்ட கோழி இறைச்­சியை இறக்­கு­மதி செய்­யும் நாடு­க­ளின் பட்­டி­ய­லில் இந்­தோ­னீ­சி­யா­வும் இணைக்­கப்­பட்­டது.

முதல் தொகுதி ‘பிராய்­லர்’ கோழி­கள் நேற்று முன்தினம் ஜூரோங் துறை­மு­கத்­தில் வந்­தி­றங்­கி­யதை டாக்­டர் கோ நேரில் பார்­வை­யிட்­டார்.

பிந்­தா­னில் இருந்து கடல் வழி­யாக ஏறக்­கு­றைய 23,000 உயி­ருள்ள கோழி­கள் கொண்டு­வ­ரப்­பட்­ட­தாக ‘ஜப்ஃபா’ வேளாண்-உணவு நிறு­வ­னம் தெரி­வித்­தது.

‘ஏவி­எஸ்’ எனப்­படும் விலங்கு­நல, மருத்­து­வச் சேவை, இந்­தோ­னீ­சிய அதி­கா­ரி­கள், கோழி இறைச்­சிக்­கான தொழில்­துறை ஆகி­ய­வற்­றோடு சிங்­கப்­பூர் உணவு அமைப்பு இணைந்து செயல்­பட்­ட­தால் இத்­த­கைய இறக்­கு­மதி சாத்­தி­ய­மா­ன­தாக அமைப்பு அதன் ஃபேஸ்புக் பக்­கத்­தில் குறிப்­பிட்­டுள்­ளது.

கால்­நடை, இறைச்சி, முட்டை போன்­ற­வற்றை சிங்­கப்­பூர் உணவு அமைப்பு, ‘ஏவி­எஸ்’ ஆகி­ய­வற்­றால் அங்­கீ­க­ரிக்­கப்­பட்ட இடங்­களில் இருந்து மட்­டுமே இறக்­கு­மதி செய்ய இய­லும் என்­பதை அது நினை­வு­றுத்­தி­யது.

இவ்­வே­ளை­யில் உண­வுத் தெரி­வு­களில் நீக்­குப்­போக்­கைக் கடைப்­பி­டிக்­கும்­படி சிங்­கப்­பூர் மக்­களை டாக்­டர் கோ கேட்­டுக்­கொண்­டுள்­ளார்.

இறக்­கு­ம­தி­யைப் பன்­மு­கப்­படுத்­தி­னா­லும் சில நேரங்­களில் விநி­யோ­கத் தடை ஏற்­ப­டக்­கூடும் என்­றார் அவர்.

உறை­ய­வைத்த கோழி இறைச்சி, புர­தச்­சத்து நிறைந்த மாற்று உண­வு­கள் ஆகி­ய­வற்றை உண்­ப­தன் மூலம் அனை­வ­ரும் பங்­க­ளிக்­க­லாம் என்­றார் டாக்­டர் கோ.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!