4 கிலோ தலை; 3 செ.மீ. குனிந்தால் தலை எடை மும்மடங்காகும்; அப்படியே அதிக நேரம் கைப்பேசி பார்த்தால் கழுத்து வலி வரும்

4 கிலோ தலை; 3 செ.மீ. குனிந்தால் தலை எடை மும்மடங்காகும்; அப்படியே அதிக நேரம் கைப்பேசி பார்த்தால் கழுத்து வலி வரும்

2 mins read
9a3fac94-55a9-4567-b1d4-b6a79746856f
-

ஒரு­வ­ரின் தலை எடை சுமார் 4 கிலோ இருக்­கும். 3 செ.மீ. குனிந்து கைப்­பே­சித் திரை­யைப் பார்க்­கும்போது தலை­யின் எடை இரண்டு மடங்கு அல்­லது மூன்று மடங்கு கூடி­வி­டும்.

அப்­ப­டியே நீண்ட நேரம் தொழில்­நுட்­பச் சாத­னங்­க­ளைப் பார்த்­துக்கெண்டே இருந்­தால், சோம்­பே­றித்­த­ன­மான வாழ்க்கை முறை­யைக் கைக்­கொண்­டால், வேலை­யி­டத்­தின் சூழ்­நிலை சரி இல்லை என்­றால் கழுத்து வலி போன்ற எலும்பு தசை பிரச்­சி­னை­களுக்கான வாய்ப்­பு­கள் அதி­கம்.

தேசிய பல்­க­லைக்­க­ழக சுகாதார அமைப்பு இதுபற்றி 2023 ஜன­வரி கட்­டுரை ஒன்­றில் தெரி­வித்து இருக்­கிறது.

அதிக நேரம் கைப்­பே­சியை அல்­லது மடிக்­க­ணி­னியை அடிக்­கடி பயன்­ப­டுத்­து­வோர் கழுத்து வலிக்கு ஆளா­க­லாம். நீண்­ட­காலப்போக்­கில் அவர்­க­ளுக்கு முது­கெ­லும்­பி­லும் வலி வர­லாம் என்று கட்­டுரை தெரி­விக்­கிறது.

நம்­மு­டைய இப்­போ­தைய வாழ்க்­கைப்பாணியை வைத்துப் பார்க்­கை­யில் வரும் ஆண்­டு­களில் முற்­றிய கழுத்து வலி­யு­டன் கூடிய அதிக நோயா­ளி­க­ளைக் காணும் வாய்ப்பு இருக்­கிறது என்று தேசிய பல்­க­லைக்­க­ழக மருத்­து­வ­ம­னை­யின் டாக்­டர் அலெக்ஸ் டியோ கூறி­னார்.

சிங்­கப்­பூ­ரில் ஆய்­வா­ளர்­கள் நடத்­திய ஆய்வு ஒன்­றின் முடி­வு­கள், 2021ல் ஒரு மருத்­துவ சஞ்­சி­கை­யில் வெளி­யி­டப்­பட்­டன.

சிங்­கப்­பூ­ரில் கழுத்து வலி என்­பது பொது­வா­ன­தா­கக் காணப்­படு­கிறது. கழுத்து வலி கார­ண­மாக செயல்­பட முடி­யாத நிலை கணி­ச­மான அள­வுக்கு ஏற்­பட­­லாம். வாழ்க்­கைத் தர­மும் குறைந்து போய்­விட வாய்ப்பு உண்டு என்று ஆய்­வா­ளர்­கள் அதில் கூறினர்.

கழுத்து வலியைத் தவிர்த்­துக் கொள்ள சிங்­கப்­பூர் பொது மருத்­து­வ­மனை சில ஆலோ­ச­னை­களைத் தெரி­வித்து இருக்­கிறது.

தொழில்­நுட்­பச் சாத­னங்­களைத் தொடர்ந்து பயன்­ப­டுத்­தா­மல் அடிக்­கடி ஓய்வு எடுங்­கள்.

மடிக்­க­ணி­னிக்­குப் பதி­லாக மேசைக் கணி­னி­யைப் பயன்­டுத்­துங்­கள். முறை­யாக அமர்ந்து வேலை செய்­யுங்­கள் என்று அது ஆலோ­சனை தெரி­வித்­துள்­ளது.