சிங்கப்பூரில் இந்திய நடனக் கலைக்குப் புகழ்பெற்ற திரு கே. பி. பாஸ்கர், திருமதி சாந்தா பாஸ்கர் இருவரையும் பற்றிய படவிளக்கக் கதைப் புத்தகம் சிறார்களுக்கு நடனக் கலையில் ஆர்வத்தை தூண்டும் என்று நம்பப்படுகிறது.
அந்தப் புத்தகத்தை கோல்கத்தாவில் செயல்படும் சயான் முகர்ஜி என்பவரும் சிங்கப்பூரரான நூலாசிரியர் அப்ஹி கிரிஷ் என்பவரும் உருவாக்கியுள்ளனர்.
'நடனக் காதல்: திரு, திருமதி பாஸ்கரின் அசாதாரணமான தொடக்கம்' என்ற பெயருள்ள அந்தப் புத்தகத்தை உலக அறிவியல் அறக்கட்டளை என்ற நிறுவனம் வெளியிட்டு இருக்கிறது.
இணைய வடிவிலான புத்தகத்தை $16 விலைக்குப் பெறலாம். புத்தகத்தின் விலை $19.90 ஆர்வமுள்ளவர்கள் str.sg/iJZt என்ற முகவரியை நாடலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

