புதிய வடிவமைப்பில் அறிவிப்புப் பலகை

புதிய வடிவமைப்பில் அறிவிப்புப் பலகை

1 mins read
35e55d7e-96b0-47c0-8886-7be95fca764a
-

பாது­காக்­கப்­பட்ட வட்­டா­ரம், பாது­காக்­கப்­பட்ட இடம் (பிஏ/பிபி) என்­பதை எடுத்­துக்­காட்­டும் வகை­யில் இடம்­பெ­றும் அறி­விப்­புப் பல­கை­க­ளின் வடி­வ­மைப்பு மேம்­ப­டுத்­தப்­பட்டுள்­ளது.

அது, இன்று முதல் 2028ஆம் ஆண்டு மே மாதம் 14ஆம் தேதி­ வ­ரைப்­பட்ட ஐந்து ஆண்டு­களில் நடை­மு­றைக்கு வரும்.

மாற்­றம் இடம்­பெ­றும் கால­கட்­டத்­தில் மக்­கள் பழைய, புதிய பல­கை­க­ளைப் பார்க்க நேரி­ட­லாம் என்று காவல்­துறை நேற்று தெரி­வித்­தது.

ராணுவ முகாம்­கள், குடி­நுழைவுச் சோத­னைச்­சா­வ­டி­கள் போன்ற கேந்­திர முக்­கி­யத்­து­வம் வாய்ந்த இடங்­கள், உள்­கட்­ட­மைப்­புச் சட்­டத்­தின்­கீழ் வரும் பிஏ/பிபி என்று அறி­விக்­கப்­படும்.

பிஏ/பிபி அறி­விப்­புப் பல­கை­கள் இருந்­தால் அந்த இடத்­திற்­குள் அனு­மதி பெற்­றுத்­தான் போக வேண்­டும். பாது­காப்­புக் கார­ணங்­க­ளுக்­காக அத்­த­கைய இடங்­களில் பாரு­டைய நட­மாட்­ட­மும் செய்­கை­களும் கட்­டுப்­ப­டுத்­தப்­பட்டு இருக்­கும்.

இப்­போ­தைய பிஏ/பிபி அறி­விப்­புப் பல­கை­கள் 1998ல் வடி­வமைக்­கப்­பட்­டவை.