சாலையில் ஆடையின்றிப் படுத்திருந்த ஆடவர்

1 mins read
8fc8b16f-e6ba-4a96-a4f6-38b65432979a
சாலையில் ஆடவர் ஒருவர் ஆடையின்றிப் படுத்திருந்ததைக் காட்டும் காணொளிப்படம். படம்: இன்ஸ்டகிராம்/எஸ்ஜிஃபாலோஸ்ஆல் -

செம்பவாங்கில் சாலை ஒன்றில் ஆடவர் ஒருவர் ஆடையேதுமின்றிப் படுத்திருந்தது தொடர்பான காணொளி சமூக ஊடகத்தில் வெளியிடப்பட்டது. எஸ்ஜிஃபாலோசால் என்ற இன்ஸ்டகிராம் பக்கத்தில் கடந்த வெள்ளிக்கிழமை அக்காணொளி வெளியானது. இதனைத் தொடர்ந்து, 34 வயது ஆடவர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்லார்.

செம்பவாங் ரோட்டில் வெள்ளிக்கிழமை அதிகாலை 2.40 மணிக்கு உதவி கேட்டு தனக்குத் தகவல் வந்ததாக காவல்துறை தெரிவித்தது. சம்பவம் தொடர்பில் புலன்விசாரணை நடந்துவருகிறது.

பொது இடத்தில் ஆடையின்றித் தோன்றியதன் தொடர்பில் யாராவது குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்டால் அவருக்கு மூன்று மாதம் வரை சிறை, $2,000 வரை அபராதம் அல்லது இவ்விரு தண்டனைகளும் விதிக்கப்படலாம்.