ஷங்காயில் மின்சார வாகன ஆலையை துணைப் பிரதமர் பார்வையிட்டார் சிங்கப்பூர்- ஷங்காய் இணக்கம் இருநாட்டு உறவுக்கு ஊக்கம்

ஷங்காயில் மின்சார வாகன ஆலையை துணைப் பிரதமர் பார்வையிட்டார் சிங்கப்பூர்- ஷங்காய் இணக்கம் இருநாட்டு உறவுக்கு ஊக்கம்

2 mins read
696d7363-8f68-4bfb-ba1d-7b7e54feac44
-

சிங்­கப்­பூ­ருக்­கும் சீனா­வின் ஷங்­காய் நக­ருக்­கும் இடைப்­பட்ட ஒத்­து­ழைப்பு, இந்த இரு நாட்­டுக்­கும் இடை­யில் புதிய புத்­தாக்கத் திட்­டங்­கள் இடம்­பெ­று­வ­தற்கு ஊக்கு­விப்­பா­கத் திகழ முடி­யும் என்று துணைப் பிர­த­மர் லாரன்ஸ் வோங் டுவிட்­ட­ரில் தெரி­வித்துள்ளார்.

சீனா­வுக்கு ஐந்து நாள் அதி­கா­ர­பூர்வ பய­ணம் மேற்­கொண்டு இருக்­கும் திரு வோங், நேற்று ஷங்­காய் கம்­யூ­னிஸ்ட் கட்சி செய­லா­ளர் சென் ஜினிங்கை சந்­தித்­தார்.

அவ­ரு­டன் நல்ல முறை­யில் பேச்­சு­வார்த்தை நடத்­தி­ய­தாக திரு வோங் தெரி­வித்­துள்­ளார்.

அதற்­குப் பிறகு அவர் இந்­தக் கருத்­தைத் தெரி­வித்­தார்.

முன்­ன­தாக திரு வோங், ஷங்­காய் நக­ரில் செயல்­படும் நியோ ஹவுஸ் என்ற மின்­சார வாகன தயா­ரிப்புத் தொழிற்­சா­லை­யைப் பார்­வை­யிட்­டார்.

அந்த நிறு­வ­னம் சிங்­கப்­பூ­ரில் ஆய்வு உரு­வாக்க நிலை­யம் ஒன்றை அமைக்­கிறது.

விவே­க­மிக்க மின்­சார சாத­னங்­களை உரு­வாக்­க­வும் தானி­யக்க வாகன தொழில்­நுட்­பங்­களை உரு­வாக்­க­வும் சிங்­கப்­பூரில் அமை­யக்­கூ­டிய நிலை­யம் ஆரா­யும் என்று திரு வோங் தெரி­வித்­தார்.

நியோ ஆலை­யில் அடுத்த தலை­முறை மின்­க­லன் தொழில்­நுட்­பத்தை திரு வோங் பார்­வை­யிட்­டார்.

நியோ நிறு­வ­னத்­தின் நிறு­வனரும் தலை­வ­ரும் தலைமை அதி­கா­ரி­யு­மான வில்­லி­யம் லியை திரு வோங் சந்­தித்­தார். அதைக் காட்­டும் படங்­களை டுவிட்­ட­ரில் திரு வோங் வெளி­யிட்­டார்.

ஷங்­காய் நக­ரில் வசிக்­கும் சிங்­கப்­பூ­ரர்­கள் ஞாயிற்­றுக்­கி­ழமை துணைப் பிர­த­ம­ரைச் சந்­தித்­த­னர்.

ஷங்­கா­யில் வசிக்­கும் சுமார் 350 சிங்­கப்­பூ­ரர்­கள், அந்­தச் சந்­திப்­பில் கலந்­து­ரை­யாடி மகிழ்ந்­த­னர். சிங்­கப்­பூ­ரின் துணைப் பிர­த­மர் என்ற முறை­யில் திரு வோங் சீனா­வுக்கு முதன்முத­லாக இப்போது பயணம் மேற்­கொண்டு இருக்­கி­றார்.

துணைப் பிர­த­ம­ரு­டன் மூத்த துணை அமைச்­சர்­களும் துணை அமைச்­ச­ரும் அதி­கா­ரி­களும் சென்று இருக்­கி­றார்­கள்.

நிதி அமைச்­ச­ரு­மான திரு வோங் இதற்கு முன்­ன­தாக 2018ல் சீனா­வுக்குச் சென்றார்.

சிங்­கப்­பூ­ரின் அடுத்த பிர­த­ம­ராக தேர்ந்­தெ­டுக்­கப்­பட்­ட பிறகு திரு வோங் மலே­சியா, இந்­தியா, புருணை, இந்­தோ­னீ­சியா நாடு­க­ளுக்­குச் சென்று தனிப்­பட்ட முறை­யில் அந்­நா­டு­க­ளு­டன் தொடர்­பு­க­ளைப் பலப்­ப­டுத்தி வரு­கி­றார்.

தமது ஐந்து நாள் சீனப் பயணத்­தின்­போது திரு வோங் பெய்­ஜிங் நக­ருக்­கும் செல்­கி­றார்.

பிர­த­மர் லீ சியன் லூங் கடந்த மார்ச் மாதம் சீனா சென்­றி­ருந்­தார். அந்­தப் பய­ணத்­தின்போது அவர் சீனப் பிர­த­மர் லி சியாங்கை சந்­தித்­தார். இரு தரப்பு உற­வு­கள் புதிய உச்­சத்­தைத் தொடும் இரு தலை­வர்­களும் அப்­போது அறி­வித்­த­னர்.

பிர­த­ம­ரின் பய­ணத்­தைத் தொடர்ந்து இப்­போது துணைப் பிர­த­ம­ரின் சீனப் பய­ணம் இடம்­பெற்று இருக்­கிறது. இந்­தப் பய­ணம் சீனா­வின் புதிய தலை­மைத்­து­வத்­து­டன் உற­வு­க­ளைத் ஏற்படுத்திக்கொள்ள திரு வோங்­கிற்கு வாய்ப்­ப­ளிக்­கும்.