பிரிட்டிஷ் இளவரசர் வில்லியம் வழங்கும் உலக சுற்றுச்சூழல் பரிசளிப்பு விழா சிங்கப்பூரில் நடக்கும்.
'எர்த்ஷாட் பிரைஸ்' என்று குறிப்பிடப்படும் அந்தப் பரிசை 2020ஆம் ஆண்டில் இளவரசர் வில்லியம் ஏற்படுத்தினார். அதன்படி ஐந்து வெற்றியாளர்களுக்குத் தலா £1 மில்லியன் (S$1.7 மில்லியன்) வழங்கப்படும்.
அதைக்கொண்டு வெற்றியாளர்கள் தங்கள் புத்தாக்கத் திட்டங்களை எதிர்காலத்திற்கு விரிவுபடுத்தலாம். சிங்கப்பூரில் விழா நடப்பது பற்றி இளவரசர் வில்லியம் திங்கட்கிழமை அறிக்கையில் அறிவித்தார்.
இந்த விழா முதன்முதலாக லண்டனிலும் பிறகு அமெரிக்போஸ்டன் நகரிலும் நடந்தது.
பரிசு வெற்றியாளர்களுடன் இறுதிப் போட்டியாளர்களுடன் உலகத் தலைவர்களும் தொழில்துறையினரும் முதலீட்டாளர்களும் நவம்பர் 6ஆம் தேதி முதல் சிங்கப்பூரில் கூடுவர்.
உலகப் புகழ்பெற்ற இசைக் கலைஞர்களும் இதர கலைஞர்களும் நிகழ்ச்சிகளைப் படைப்பார்கள் என்று ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர். அந்தப் பரிசுக்கு தெமாசெக் டிரஸ்ட், ஸ்டான்டர்ட் சார்ட்டர்ட் உள்ளிட்ட அமைப்புகள் ஆதரவு அளிக்கின்றன.