வெளிநாட்டு பணத்துடன் வந்த இந்தோனீசியப் பெண்கள்

வெளிநாட்டு பணத்துடன் வந்த இந்தோனீசியப் பெண்கள்

1 mins read
4308ccbb-e401-48e3-9e37-9b81c4e81148
-

அறி­விக்­கா­மல் $35,600க்கும் அதிக வெளி­நாட்டு நாண­யத்தை சிங்­கப்­பூ­ருக்­குள் கொண்­டு­வர முயன்ற இந்­தோ­னீ­சி­யா­வைச் சேர்ந்த இரு பெண்கள் சிங்கப்­பூர் பய­ணப் படகு நிலை­யத்­தில் மே 10ஆம் தேதி அதி­கா­ரி­களால் தடுத்து நிறுத்­தப்­பட்­ட­னர்.

அவர்­கள் ஒரு பய­ணப் பட­கில் இருந்து தரை­யில் இறங்­க­வி­ருந்­தார்­கள். பணம் பிளாஸ்­டிக் பைகளில் கட்­டப்­பட்டு மூன்றாகப் பிரிக்­கப்­பட்டு இரு கைப்­பெட்டி­களி­லும் முது­குப் பை ஒன்­றி­லும் வைக்­கப்­பட்டு இருந்­த­தாக குடி­நு­ழை­வுச் சோதனைச்­சா­வடி ஆணை­யம் நேற்று ஃபேஸ்புக்­கில் கூறியது. எக்ஸ்-ரே படம் மூலம் பணம் கண்­டு­பி­டிக்­கப்­பட்­டது.

பிறகு அதி­கா­ரி­கள் முழு சோதனை நடத்­தி­னர். இந்த விவகா­ரம் மேல் விசா­ர­ணைக்­காக காவல்­து­றை­யி­டம் ஒப்­படைக்­கப்­பட்டுள்­ளது.

சிங்­கப்­பூ­ருக்கு வரு­கின்ற அல்­லது இங்கிருந்து வெளி­யேறு­கின்ற பயணி­கள் $20,000க்கும் மேற்­பட்ட வெளி­நாட்டு நாண யத்தை­ எடுத்துவந்­தால், அது பற்­றியும் காசோலை முத­லான விவ­ரங்­களையும் காவல்­து­றை­யிடம் தெரிவிக்க வேண்­டும்.

சட்டத்தை மீறினால் அது ஒரு குற்­ற­மா­கக் கரு­தப்­படும். அக்குற்­றத்­திற்கு $50,000 வரை அப­ரா­தம், மூன்­றாண்டு வரை சிறை அல்லது இரண்­டும் தண்­ட­னை­யாகக் கொடுக்­கப்­படும்.