சிங்கப்பூரின் தேசிய விமான நிறுவனமான சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் (எஸ்ஐஏ) நிறுவனமும் ஸ்கூட் நிறுவனமும் இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் மொத்தம் 2.7 மில்லியன் பயணிகளைச் சுமந்து சென்றன.
இந்த எண்ணிக்கை சென்ற ஆண்டு இதே மாதத்துடன் ஒப்பிடுகையில் 85.5% அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த இரண்டு நிறுவனங்களின் விமானங்களிலும் இருக்கை கொள்ளளவு விகிதமும் அதிகரித்தது. என்றாலும் விமானச் சரக்குகளுக்கான தேவை குறைந்து இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

