37 வயது வரையிலான பெண்கள் கருமுட்டைகளை பாதுகாக்கலாம்

37 வயது வரையிலான பெண்கள் கருமுட்டைகளை பாதுகாக்கலாம்

1 mins read
f6d95fe7-a01a-43c1-9836-131da1b5b776
-

சிங்­கப்­பூ­ரில் பெண்­கள் இனி­மேல் 37 வயது வரை­யில் தங்­க­ளு­டைய கரு­முட்­டை­களை உறை­ய­வைத்து பாது­காக்க முடி­யும். இதற்கு முன்பு இதற்­கான வயது வரம்பு 35ஆக இருந்­தது.

ஜூலை 1ஆம் தேதி­யி­லி­ருந்து இந்த மாற்­றம் அம­லுக்கு வரு­கிறது.

பெண்­க­ளின் வயது வரம்பு உயர்த்­து­வது குறித்து உள்­ளூர், அனைத்­து­லக ஆய்­வா­ளர்­க­ளி­டம் கருத்­த­றி­யப்­பட்­டது. அப்­போது 37 வயது வரை­யில் பெண்­க­ளின் கரு­முட்­டை­களை உறை­ய­வைத்து வெற்­றி­க­ர­மாக கரு­வு­று­த­லுக்­குப் பயன்­ப­டுத்­த முடி­யும் எனத் தெரி­விக்­கப்­பட்­டது.

இதை­ய­டுத்து கரு­முட்­டை­களை உறை­ய­வைத்து பாது­காக்­கும் பெண்­க­ளுக்­கான வயது வரம்பு 35லிருந்து 37க்கு உயர்த்­தப்­பட்­டது.

கேகே மக­ளிர், சிறார் நல மருத்­து­வ­னை­யின் செயற்கை கருத்­த­ரிப்பு நிலை­யத்­திற்கு நேற்று வரு­கை­ய­ளித்த சமு­தாய, குடும்ப மேம்­பாட்டு துணை அமைச்­சர் சுன் ஷுவெ­லிங் புதிய மாற்­றங்­கள் குறித்து அறி­வித்­தார்.

கரு­முட்­டை­களை உறைய வைப்­ப­தற்­கான வயது வரம்பு 35லிருந்து அதி­க­ரிப்­பது குறித்து தொடர்ந்து மருத்­துவ ஆய்வாளர்­க­ளி­ட­மும் மருத்­துவ நிபு­ணர்­க­ளி­ட­மும் ஆலோ­சனை நடத்­தப்­படும் என்று 2022ல் தான் அறி­வித்­ததை அவர் சுட்­டிக்­காட்­டி­னார்.

தற்­போது வயது வரம்பை உயர்த்­து­வ­தற்­கான நம்­பிக்கை கிடைத்­துள்­ளது என்று அமைச்­சர் சுன் குறிப்­பிட்­டார். வரும் ஜூலை 1ஆம் தேதி­யி­லி­ருந்து கரு­முட்­டை­களை தானம் செய்­ப­வர்­க­ளுக்­கான வயது வரம்­பு 37க்கு உயர்த்­தப்­படும்.