மூன்று வயதிலிருந்து தனது மகளை பல்வேறு வகையில் துன்புறுத்தி, தாக்கி, கழிவறையில் பல மணி நேரம் நிர்வாணமாக அடைத்து வைத்ததாக 47 வயது தந்தையை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
2017ஆம் ஆண்டில் ஐந்து வயதில் சிறுமி இறக்கும்வரை கொடூரச் செயல் தொடர்ந்தது என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இதே காலகட்டத்தில் இரண்டு வயது முதல் நான்கு வயது வரையில் மகனையும் அவர் கொடுமைப்படுத்தியிருப்பதாகக் கூறப்படுகிறது.
மொத்தம் 26 குற்றச்சாட்டுகளை ஆடவர் எதிர்நோக்கு கிறார்.
மகளைக் கொன்றதற்காக மரண தண்டனை விதிக்கும் குற்றச்சாட்டும் அவர் மீது கொண்டு வரப்பட்டுள்ளது.
இந்த வழக்கின் விசாரணை ஜூலை மாதம் தொடங்குகிறது.
2017இல் ஆகஸ்ட் 10ஆம் தேதி இரவு ஒன்பது மணியிலிருந்து மறுநநாள் விடியற்காலை வரையிலான இடைப்பட்ட காலத்தில் சிறுமிக்கு அவர் மரணம் விளைவித்ததாக குற்றச்சாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் சிறுமி எப்படி இறந்தார் என்ற விவரம் தெரிவிக்கப்படவில்லை. உயிரோடுள்ள மகனின் அடையாளம் தெரியாமல் இருப்பதற்காக ஆடவரின் பெயரை வெளியிட நீதிமன்றம் தடை விதித்தது.

