காவல்துறையின் இரண்டு பெண் அதிகாரிகள் மானபங்கம்; மேலதிகாரிக்கு ஒன்பது மாதம் சிறைத் தண்டனை

காவல்துறையின் இரண்டு பெண் அதிகாரிகள் மானபங்கம்; மேலதிகாரிக்கு ஒன்பது மாதம் சிறைத் தண்டனை

2 mins read
0835e48e-9222-48bf-ab08-4146010048f8
-

காவல்­துறை மேல­தி­காரி ஒரு­ வருக்கு, அவ­ரது கீழ் பணி­யாற்­றிய இரண்டு பெண் அதி­கா­ரி­களை இரண்டு வெவ்­வேறு சம்­ப­வங்­களில் மான­பங்­கப்­ப­டுத்­தி­ய­தற்­காக சிறைத் தண்­டனை விதிக்கப்­ பட்­டது.

இரு அதி­கா­ரி­களில் ஒரு­வ­ரி­டம் சக ஊழி­யர்­க­ளின் முன்­னி­லை­யில் பாலி­யல் செய­லில் ஈடு­பட்டு அவர் சிக்­கியிருக்கிறார்.

2015க்கும் 2019க்கும் இடையே குற்­றச்­செ­யல்­க­ளைப் புரிந்த மேலதி­காரி நேற்று தம் மீது சுமத்­தப்­பட்ட மூன்று மான­பங்க குற்­றச்­சாட்­டு­க­ளை­யும் மற்­றொரு அதி­கா­ரியை அவ­ம­தித்த குற்­றச்­சாட்­டை­யும் ஒப்­புக்கொண்­டார். அவ­ருக்கு ஒன்­பது மாதம் சிறைத் தண்­டனை விதிக்­கப்­பட்­டது.

நீதி­பதி அவ­ருக்கு தண்­டனை விதிக்­கப்­ப­டும்­போது இதர ஏழு குற்­றச்­சாட்­டு­க­ளை­யும் கவ­னத்­தில் எடுத்­துக்கொண்­டார்.

மேல­தி­கா­ரி­யின் விவ­ரம், அவ­ரால் பாதிக்­கப்­பட்ட பெண் அதி­கா­ரி­க­ளின் விவ­ரம் மற்­றும் வேலை­யிட விவ­ரங்­கள் வெளி­யி­டப்­ப­ட­வில்லை. பெண் அதி­கா­ரி­கள் பாதிக்­கப்­ப­டக்­கூ­டாது என் ­ப­தற்­காக அவர்களின் அடை யாளங்களை வெளி­யிட நீதி­மன்றம் தடைவிதித்தது.

2017 ஆகஸ்ட் அல்­லது செப்­டம்­ப­ரில் காரில் சுற்­றுக்­கா­வ­லில் ஈடு­பட்­ட­போது முதல் பெண் அதி­கா­ரி­யி­டம் அவர் தகாத முறை­யில் நடந்­து­கொண்­டார். பெண் அதி­கா­ரி­யின் மடி­யில் இருந்த தக­வல் பரி­மா­றும் சாத­னத்தை எடுப்­ப­து­போல அவர் தொடை­யின் உட்­பு­றத்­தைத் தொட்­டுள்­ளார். இரண்டு முறை இது­போன்ற சம்­ப­வம் நடந்­துள்­ளது.

2015 அக்­டோ­பர் 25ஆம் தேதி காவல்­து­றைக்கு வரும் அழைப்­புக்கு பதி­ல­ளிக்­கும்­போது இரண்­டா­வது பெண் அதி­கா­ரி­யி­டம் பாலி­யல் ரீதி­யா­க­வும் அவ­ம­திக்­கும்­வி­த­மா­க­வும் அவர் பேசி­யுள்ளார்.

அதே ஆண்டு நவம்­பர் மாதம் இரு­வ­ரும் நிகழ்ச்­சி­ ஒன்றில் இருந்­த­போது அவர் மானபங்க செய­லில் ஈடு­பட்­டுள்­ளார்.

2019 மே 5ஆம் தேதி மாலை 7.30 மணி­ய­ள­வில் அக்­கம்­பக்க காவல் நிலை­யத்­தில் ஆயு­தங்­களை எடுக்­கும்­போ­தும் அவர் பெண் அதி­கா­ரி­யின் தொடையை தனது இரு கைக­ளால் பிடித்­துள்­ளார். இதனை மற்ற அதிகாரி களும் நேரில் பார்த்ததாக நீதி மன்றத்தில் குற்றச்சம்பவங்களை விவரித்த அரசுத் தரப்பு வழக் கறிஞர் சோங் யோங் தெரி வித்தார். குற்றவாளியை $15,000 பிணையில் விடுவிக்க நீதிமன்றம் அனுமதியளித்தது. ஜூன் 6ஆம் தேதி சிறைத் தண்டனையைத் தொடங்க அவர் நீதிமன்றத்தில் சரணடைய வேண்டும்.