டிக்டாக் தொடங்கிய இலவசப் பயிற்சி

டிக்டாக் தொடங்கிய இலவசப் பயிற்சி

1 mins read
80574139-b68b-431d-bfdf-c72a5423e650
-

டிக்­டாக் நிறு­வ­னம், உள்­ளூர் திற­னா­ளர்­களை அதி­க­ரிக்­கும் நோக்­கத்­தில் மூன்று வார இல­வச பயிற்­சியை அறி­வித்­துள்­ளது. இதன் மூலம் மாண­வர்­கள், டிக்­டாக் போன்ற காணொளி­களை உள்­ள­டக்­கிய செய­லியை உரு­வாக்­கு­வது எப்­படி என்­பதை கற்­றுக்கொள்­வார்­கள்.

டிக்­டாக் பொறி­யா­ளர் குழு இந்த இல­வ­சப் பயிற்­சியை நடத்து­கிறது.

பல்­க­லைக்­க­ழ­கம், பல­துறைத் ­தொ­ழிற்கல்­லூரி, இதர கல்வி நிலைய மாண­வர்­கள் இதில் பங்­கேற்­க­லாம்.

திங்­கட்­கி­ழமை தொடங்­கிய முதல் பயிற்சி வகுப்­பில் இது­வரை 1,300 மாண­வர்­கள் பதிவு செய்­துள்­ள­னர். திங்­கள் முதல் மே 31ஆம் தேதி வரை எட்டு நாள் முதல் பயிற்சி வகுப்பு நடை­பெ­று­கிறது.