அமெரிக்காவின் அறைகலன் கடையான கிரேட் அண்ட் பேரல் கடை பத்து ஆண்டுகளுக்குப் பிறகு சிங்கப்பூரிலிருந்து வெளியேறுகிறது. சிங்கப்பூரில் அது செயல்படும் கடைசி நாள் மே 31.
கடை மூடுவது குறித்து சமூக ஊடகங்கள் வழியாக அறிவித்த அந்நிறுவனம், ஐயன் ஆர்ச்சர்ட் ஸ்டோர், இணையத்தள சில்லறைக் கடை ஆகிய இரண்டும் இம்மாதம் இறுதியில் மூடப்படுவதாகத் தெரிவித்தது.
ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் விசாரித்ததில் கடையை தொடர்ந்து நடத்துவதற்கான உரிமம் புதுப்பிக்கப் படவில்லை என்று தெரிவிக்கப்பட்டது.

