மேலும் அதிக மழை நாள்களை எதிர்பார்க்கலாம்

மேலும் அதிக மழை நாள்களை எதிர்பார்க்கலாம்

1 mins read
2fc46dee-9b70-492b-bdbb-789e69630b62
-

தீரா வெப்பத்தில் திண்டாடும் மக்களுக்கு ஒரு நற்செய்தி. மேலும் அதிக மழை நாள்களை இனி எதிர்பார்க்கலாம் என்று சிங்கப்பூர் வானிலை ஆய்வு நிலையம் தெரிவித்தது. விடியலுக்கு முன்னும் காலை வேளையிலும் பல தினங்கள் இடியுடன் கூடிய மழை பொழிவதுடன் பலத்த காற்றும் வீசும் என்று முன்னுரைக்கப்பட்டுள்ளது. ஒருசில தினங்கள் தீவில் ஆங்காங்கே பகலிலும் மாலையிலும் இடியுடன் கூடிய மழை சிறிது நேரம் பொழியலாம். வெப்பநிலையை மழை சற்று மிதமாக்கினாலும் பெரும்பாலான நாள்களில்

33, 34 டிகிரி செல்சியஸ் வரை பதிவாகக்கூடும்.