செய்திக்கொத்து

செய்திக்கொத்து

1 mins read
1ee662af-2376-49e6-ad32-534c947b52cb
-

மியன்மாருக்கு செஞ்சிலுவைச் சங்கம் $50,000 நிதி ஆதரவு

மியன்மாரை 'மோக்கா' சூறாவளி தாக்கியதை அடுத்து நிவாரண உதவிக்கு ஆதரவளிக்கும் வகையில் சிங்கப்பூர் செஞ்சிலுவைச் சங்கம் $50,000 நிதி வழங்க உறுதி தெரிவித்துள்ளது. அதிகமான உடனடி மனிதநேயத் தேவைகள் மியன்மாரில் எழுந்துள்ள நிலையில் மியன்மாரின் செஞ்சிலுவைச் சங்கம் அதன் அவசரநிலை செயல்பாட்டு நிலையத்தைத் தொடங்கியதுடன் 700க்கும் மேற்பட்ட தொண்டூழியர்களைத் தயார்நிலையில் வைத்திருக்கிறது. இதற்கிடையே மியன்மாரில் மீட்புப் பணி மேற்கொள்வதற்காக பொதுமக்களிடமிருந்து நிதி திரட்டும் திட்டம் ஒன்றையும் சிங்கப்பூர் செஞ்சிலுவைச் சங்கம் தொடங்கத் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்பட்டது.

கம்ஃபர்ட்டெல்குரோவின் முதல் காலாண்டு வருவாய் 56.9% சரிவு

கம்ஃபர்ட்டெல்குரோ நிறுவனம் அதன் முதலாம் காலாண்டு வருவாய் $32.8 மில்லியன் என நேற்று அறிவித்தது. ஆண்டு அடிப்படையில் கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இது 56.9% சரிவு என்று அறியப்படுகிறது. பொதுப் போக்குவரத்துச் சேவைப் பிரிவின் மீது ஏற்பட்டுவரும் பணவீக்க அழுத்தங்களே இந்தச் சரிவுக்குக் காரணம் என்று குழுமம் கூறியுள்ளது.

இதற்கிடையே, பொருளியல் வளர்ச்சி மெதுவடைந்து வருவதற்கான அறிகுறிகள் சிங்கப்பூரில் தெரிவதாக கம்ஃபர்ட்டெல்குரோ தெரிவித்தது. ஆஸ்திரேலியாவில் ஓட்டுநர் தட்டுப்பாடும் அயர்லாந்து, பிரிட்டனில் மீண்டுவரும் நிலையும் உள்ளதென நிறுவனம் தெரிவித்துள்ளது.